அரசியற் படலம்117

மணிமுடிகள்     உராய்ந்து  பொற்  கழல்தேய்கிறது  என்கிறார். இனிப்
பகைவரின்மையால்    துருவேறி.    கறை   பிடிப்பதால் -   அடிக்கடி
தீட்டுதலால்  தேயும்   எனவும்  கூறுவர்.  மகுட கோடி:  மகுட வரிசை
வேலும்  என்பது    உபலட்சணத்தால்  பிற  கருவிகளையும் குறிக்கும்.
சேவடி:    சிவந்த     பாதங்கள்.   வேலும்.   கழலும்    உம்மைகள்
எண்ணுப்பொருள் உடையவை.                                8
 

176.

மண்ணிடை உயிர்தொறும் வளர்ந்து. தேய்வு இன்றி.
தண் நிழல் பரப்பவும். இருளைத் தள்ளவும்.
அண்ணல்தன் குடை மதி அமையும்; ஆதலான்.
விண்ணிடை மதியினை. ‘மிகை இது’ என்பவே.
 

வளர்ந்து   தேய்வு   இன்றி  -   நாளுக்கு   நாள்   வளர்ந்து.
தேய்தலில்லாமல்;  மண்  இடை  உயிர்தொறும்-  உலகிடை வாழும்
உயிர்கள்  தோறும்; தண் நிழல் பரப்பவும்- குளிர்ந்த நிழலை எங்கும்
பரப்பவும்;   இருளைத்தள்ளவும்-   இருளே   இல்லாமல்   நீக்கவும்;
அண்ணல்  தன் குடைமதி
- பெருமைமிக்க தயரதனது வெண்கொற்றக்
குடையாகிய  மதியே;  அமையும்  ஆதலால்-  போதும் (பொருந்தும்)
ஆதலாலே;   விண்  இடைமதியினை-  வானில்  உள்ள  வளர்தலும்
தேய்தலுமுடைய  சந்திரனை;  இதுமிகை  என்ப-  இந்த மதி கோசல
நாட்டினுக்கு வேண்டாத ஒன்று என்பர்.

என்ப:     என்று  கூறுவர்  மேலோர்.  தசரத மன்னனது ஆட்சிச்
சிறப்பால்   உயிரினங்கள்   அகத்துன்பமும்.   புறத்துன்பமும்   தீரும்
என்பது அகவிருள். புறவிருள் இரண்டும் நீங்கும் என்பது கருத்து.

விண்மதி     விண்ணில் நின்று. தேய்தலும் வளர்தலும் உடையதாக
உலகின்  புற  விருள்போக்கி. தண்  ஒளி  பரப்பும் தகைமை உடையது.
இடை    மதியோ.   தேய்தலும்     வளர்தலுமின்றி.   மண்ணிடையும்.
விண்ணிடையும்    வாழும்   உயிர்கள்  எல்லாவற்றினுடய  அக.  புற
இருள்களை      நீக்கி.     தண்ணிழலைப்பரப்புகின்றது    என்கிறார்.
மாமன்னனின் வெண்கொற்றக்குடைச்சிறப்பு கூறியதாயிற்று.          9
   

177.

வயிர வான் பூண் அணி மடங்கல் மொய்ம்பினான்.
உயிர் எலாம் தன் உயிர் ஒக்க ஓம்பலால்.
செயிர் இலா உலகினில். சென்று. நின்று. வாழ்
உயிர் எலாம் உறைவது ஓர் உடம்பு ஆயினான்.
 

வயிர     வான் பூண் அணி - வயிரம் இழைத்துச் செய்யப்பட்ட
அழகிய    அணிகலன்களை    அணிந்துள்ள;   மடங்கல்   போல்
மொய்ம்பினான்
-  சிங்கம்  போன்று வலிமை  உள்ள தயரத மன்னன்;
உயிர்  எலாம்  தன்  உயிர்   ஒக்க   ஓம்பலால் 
-   மன்னுயிர்
அனைத்தையும் தன்னுயிர்  போலக்  கருதிக்  காத்துவருவதால்; செயிர்
இலா உலகினில்
- குற்றமில்லாத  இப்பேருலகத்திலே; சென்று. நின்று
வாழ்உயிரெலாம்
-இயங்கியற்பொருள். நிலையிற் பொருள்களாக இருந்து