118பால காண்டம்  

வாழும்  உயிரெல்லாம்; உறைவது  ஓர் உடம்பு  ஆயினன்-  தங்கி
வாழ்வதற்குத்தக்க பெருமைமிக்க உடம்பாகவும் ஆனான்.

தயரதன்     அன்பாலும்   அருளாலும்   உயிர்கள்  அனைத்தின்
விருப்பம்  நிறைவேற்றுகின்ற  உடலாக  மட்டுமே  இருந்தான் என்னும்
புதுக்கருத்தை  கவிச்சக்கரவர்த்தி  வெளியிடுகிறார். கம்பர் காலம் வரை
இலக்கியங்கள்  மன்னனை உயிர் எனவே  கூற. கம்பன் மறுதலையான.
புரட்சிகரமான இக்கருத்தை முதன் முறையாக வெளியிட்டுள்ளார்.

மடங்கல்:  சிங்கம். “வயிரவான் பூண்” என்பதற்குத் தோளணியாகிய
‘வாகுவலயம்’  என்றும்  கூறுவர். சென்று வாழ்உயிர். நின்றுவாழ் உயிர்
எனக் கொண்டு சாம். அசாம்  என்றிரண்டு வகை உயிர்களாகக்கொள்க.
இது  முதல்  ஒன்று   பாடல்களால்  தயரதன்  அரசு  செய்யும் திறம்
கூறப்படுகின்றது.                                           10
 

178.

குன்றென உயரிய குவவுத் தோளினான்.
வென்றிஅம் திகிரி. வெம் பருதியாம் என.
ஒன்றென உலகிடை உலாவி. மீமிசை
நின்று. நின்று. உயிர்தொறும் நெடிது காக்குமே.
 

குன்று   என உயரிய - மலைபோலும் வளர்ந்து ஓங்கிய; குவவுத்
தோளினான்
-  திரண்ட தோள்கள்  கொண்ட தயரதனுடைய; வென்றி
அம்திகிரி
- வெற்றிமிக்க ஆணைச் சக்கரமானது; வெம்பரிதி ஆம்என
-  வெம்மையுடைய  சூரியனோ  என்னும்படி;  மீமிசை  நின்று- மிக
உயரமான    வானிலே    நின்றும்;    ஒன்று    என-  ஒன்றாகிய
பரம்பொருளைப்  போல; உலகிடை உயிர்தொறும் உலாவி  நின்று-
உலகில் வாழும் சர. அசரங்களாகிய உயிர்கள் தோறும் உலாவி. நின்று;
நெடிது காக்கும்
- பெரிதும் காத்தல் தொழிலைச் செய்யும்.

பரம்பொருள்     ஒன்றாக நின்று.  உயிர்தொறும்  உலாவி. நெடிது
காத்தல்  போல  வென்றியம்  திகிரி.  பரிதியாமென  நின்று  காக்கும்
என்பது  கருத்து.  குன்று:  தோளின்  திரட்சி  உயர்ச்சிவுண்மையாலும்
உவமையாகும்.  ‘ஒன்றென’  என்பதற்கு.  பொதுவறத்  தனித்தே நின்று
என. திகிரிக்கு ஏற்றிக் கூறினும் பொருந்தும்.

குன்றென.  பருதியாம் என. ஒன்று என. என்றுவரும் ‘என’ என்பன
உவமை உருபுகள். நெடிது: நீண்டகாலம் என்னும்  பொருளும்  கூறுதல்
பொருந்தும்.  குவவுத்  தோள்: திரண்டதோள்.  வெம்பருதி: வெப்பமும்
ஒளியும்   தரும்  சூரியன்.  மீமிசை:   மிகமேலே   (மீமிசைச்  சொல்).
காக்குமே:   என்பதில்   ‘ஏ’   அசை.   பருதிஆம்:   பருதி  ஆகும்
(இடைக்குறை)
 

179.

‘எய்’ என எழு பகை எங்கும் இன்மையால்.
மொய் பொறாத் தினவு உறு முழவுத் தோளினான்.
வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து. இனிது அரசு செய்கின்றான்.