திரு அவதாரப் படலம்129

‘கூறினார்’     யார் என்பதற்கு 18ஆம் பாடலில் வரும்  ‘வானவர்’
என்பதை   எழுவாயாகக்  கொண்டு  பொருள்  கொள்க.  ‘விதியொடு’
என்பதிலுள்ள  ‘ஒடு’  உம்மைப் பொருளில் வந்தது. ‘விதியும்’  என்பது
பொருளாம். சாபத்தால் நாள்தோறும் கலைகள்  தேய்ந்த  சந்திரனுக்குத்
தனது  சடையில்  இடம்தந்து  வளரச்செய்தவன் சிவபிரான்  ஆதலால்
‘மதி  வளர்  சடை  முடி’  என்றார்.  கொலைத்தொழிலே  தொழிலாக
உடைய  அரக்கர்.  தங்கள்  வேல்களை  அடிக்கடி   கொல்லுலையில்
கொதிக்க வைப்பதால் “கொதிகொள்வேல்” என்றார்.              16
 

196.‘ஐ-இரு தலையினோன் அனுசர் ஆதியாம்
மெய் வலி அரக்கரால். விண்ணும் மண்ணுமே
செய் தவம் இழந்தன;- திருவின் நாயக!-
உய் திறம் இல்லை’ என்று உயிர்ப்பு வீங்கினார்.

 
 

திருவின்  நாயக- இலக்குமிக்கு நாயகனாகிய பெருமானே!; ஐயிரு
தலையினோன் அனுசர்   ஆதியாம்    மெய்வலி   அரக்கரால்
-
பத்துத்தலைகளை    உடைய    இராவணன்     அவனுக்குப்   பின்
பிறந்தவர்கள் முதலான உடல்வலிமை மிக்க அரக்கர்களால்; விண்ணும்
மண்ணுமே  செய்தவம்  இழந்தன
-  விண்ணுலகமும். மண்ணுலகமும்
தாம்  செய்துள்ள புண்ணியங்களை இழந்து  வருந்துகின்றன; உய்திறம்
இல்லை  என்று  உயிர்ப்பு வீங்கினார்
- அவை  உய்வதற்கு வழியே
இல்லை என்று கூறி. பெரு மூச்சு விட்டனர்.

ஐயிரு     தலையினோன்: பத்துத்தலைகளை உடைய இராவணனது
கொடுமையை நினைத்து அவனைக் குறிப்பிட்டனர்.  அனுசர்:  தம்பியர்
கும்பகருணன்.  கரன்.  திரிசிரன். தூடணன் ஆகியோராம்.  ‘விண்ணும்
மண்ணும்’ இடவாகு பெயராய் விண்ணுளோரையும்  மண்ணுளோரையும்
குறித்தது.   ‘செய்தவம்   உய்திறம்’   என்பன    வினைத்தொகைகள்.
‘திருவின்  நாயக’  என்றது அவ்விருவரும்  ராமனாகவும். சீதையாகவும்
அவதரிக்க வேண்டினர் என்பதை உணர்த்திநின்றது.

தவம்    செய்ய   இயலாமையைக்   குறித்தது.  செய்தவம்   எதிர்
காலப்பொருளது.                                           17
 

197.‘எங்கள் நீள் வரங்களால் அரக்கர் என்று உளார்.
பொங்கு மூஉலகையும் புடைத்து அழித்தனர்;
செங் கண் நாயக! இனி தீர்த்தல்; இல்லையேல்.
நுங்குவர் உலகை. ஓர் நொடியில் என்றனர்.
 
 

எங்கள்     நீள்வரங்களால் - எங்களுடைய  மிகுந்த வரபலத்தால்;
அரக்கர்   என்றுளார்  பொங்கு மூவுலகையும் புடைத்தழித்தனர்
-
அரக்கர்       என்னும்      ‘கொடியவர்கள்       வளர்ந்தோங்கிய
மூவுலகத்துயிர்களையும்.  பொருது கொன்றனர்; செங்கண்மால் நாயக-
அழகிய