130பால காண்டம்  

கண்களையுடைய   தலைவனே!; இனித்தீர்த்தல் இல்லையேல்- இனி.
இவ்வரக்கர்களின்   கொடிய  செயலைத்  தீர்க்கவில்லையானால்;  ஓர்
நொடியில்  உலகை  நுங்குவே  என்றனர்
- வெகுவிரைவில் உலகம்
முழுவதையும் அழித்துவிடுவர் என்றார்கள்.

நீள்வரம்:  நீண்ட வாழ்வையும். நிறைந்த வலிமையையும் தரும்வரம்
என்பது  பொருள்  (பிரமனும். சிவனுமாகிய தேவர்கள்  கொடுத்தவரம்)
என்பதால்   ‘எங்கள்   நீள்வரம்’   என்றனர்  புடைத்து   அழித்தல்:
அடித்துக்   கொல்லுதல்.   நுங்குதல்:   விழுங்குதல்  என்பதும்  ஒரு
பொருளாம்.                                              18
 

198.என்றனர். இடர் உழந்து. இறைஞ்சி ஏத்தலும்.
மன்றல் அம் துளவினான். ‘வருந்தல்; வஞ்சகர்-
தம் தலை அறுத்து. இடர் தணிப்பென் தாரணிக்கு;
ஒன்று நீ கேண்ம்’ என. உரைத்தல் மேயினான்.
 

என்றனர்  இடர்  உழந்து  இறைஞ்சி  ஏத்தலும்   -   என்று
கூறியவர்களான தேவர்கள் துன்பத்தால் வருந்தி.  திருமாலைத் துதித்து
வணங்கிடவும்;  மன்றல்  அம்  துளாவினான்-   மணமும். அழகும்
உடைய  துழாய் மாலையணிந்த  திருமால்;  வருந்தல்  ‘வஞ்சகர்தம்
தலை  அறுத்து தாரணிக்கு  இடர் தணிப்பென்
-  (அத்தேவர்களை
நோக்கி)   வருந்தாதீர்கள்!   வஞ்சக    அரக்கர்களின்   தலைகளைத்
துணித்து உலகத்தின்  துன்பத்தைத் தணிப்பேன்; ஒன்று நீர்  கேண்ம்
என  உரைத்தல்  மேயினான்
-  அதற்குரியதொன்றைக்  கேளுங்கள்
என்று சொல்ல. ஆரம்பித்தான்.

மன்றல்:    மிகுமணம். வருந்தல்: அல்லீற்று எதிர்மறை வியங்கோள்
எதிர்  மறை.  கேளும்  என்பது   கேண்ம்  என  வந்தது  விகாரமும்
சந்தியுமாம்.   ‘ம்’:   மகரக்   குறுக்கம்.    வஞ்சகர்:   மாயத்தொழில்
வல்லோர்.                                                19
 

199.‘வான் உளோர் அனைவரும் வானரங்கள் ஆய்.
கானினும். வரையினும். கடி தடத்தினும்.
சேனையோடு அவதரித்திடுமின் சென்று’ என.
ஆனனம் மலர்ந்தனன்- அருளின் ஆழியான்
 

வான் உளோர்  அனைவரும்  வானரங்களாய்-  விண்ணுலகில்
வாழும்  தேவர்கள்  ஆகிய  நீங்கள்  எல்லோரும்  குரங்கினங்களாக;
கானினும்.   வரையினும்  கடிதடத்தினும்  சென்று  சேனையோடு
அவதரித்திடுமின்
- காடுகளிலும்.  மலைகளிலும்.   அம்மலைத்  தாழ்
வரைகளிலும்  சென்று.  பிறப்பீராக;   என.   அருளின்  ஆழியான்
ஆனனம்  மலர்ந்தனன் 
-  என்று.  கருணைக்   கடலான திருமகள்
நாயகன்   திருவாய் மலர்ந்தருளினான்.