திரு அவதாரப் படலம்131

சேனை:   கூட்டம்.   கூட்டத்தோடு  சென்று  பிறப்பீராக என்றான்
என்பது  பொருள்.  கான்: காடு. கடிதடம்:  மணம்மிக்க  சோலையுமாம்.
ஆனனம்:   முகம்.   வடமொழியில்    வாயைக்    குறிக்கும்   சொல்
இல்லையாதலால் ஆனனம் என்பதே  வாய்க்கும்  ஆகிவரும் என்பதால்
வாய்திறந்து கூறுதல் என்னும் பொருளில் இது வந்தது.

இராவணன்   பிரமனிடம் வரம்பெறும் போது. மனிதர். குரங்குகளை
அற்பமாக  எண்ணி.  முனிவர். தேவர். அசுரர்களால்  தனக்கு  மரணம்
நேரக்கூடாது  என்று வரம்கேட்டு மனிதர்.  குரங்குகளை  நினைக்காமல்
விட்டான்.     திருமால்.     தான்     மனிதனாகவும்.     தேவர்கள்
வானரங்களாகவும்   செல்வதே   இராவணனை   அழிக்கும்வழி   என
எண்ணிக் கூறினார் என்பது கருத்து.                           20
 

200.

‘மசரதம் அனையவர் வரமும். வாழ்வும். ஓர்
நிசரத கணைகளால் நீறுசெய்ய. யாம்.
கச ரத துரக மாக் கடல்கொள் காவலன்.
தசரதன். மதலைவாய் வருதும் தாரணி.

 
 

மசரதம்     அனையவர்  -  கானல்  நீரைப்போன்றவர்களாகிய
அரக்கர்களுடைய;  வரமும்  வாழ்வும்- வரபலத்தையும். வாழ்வையும்;
நிசரத கணைகளால்  நீறு செய்ய
-  எமது  குறிதவறாத அம்புகளால்
சாம்பலாக்க (அழிக்க); யாம் கசரத துரகமாகக் கடல் கொள்காவலன்-
யாமே.    யானை.   தேர்.   காலாள்   என்னும்   கடல்   போன்ற
நாற்பெருஞ்சேனைகளையுடைய  வேந்தனான;  தசரதன்  மதலையாய்
தாரணிவருதும்
-     தயரதன்    புத்திரனாக    உலகத்தில்    வந்து
அவதரிக்கின்றோம்.

மசரதம்:  பேய்த்தேர் (கானல்நீர்). நிசரதம்: உண்மை. நிசரத கணை:
உண்மையான அம்புகள் (பொய்யாது தாக்கவல்லது).  நீறு: சாம்பல். நீறு
செய்தல்:   அழித்தலாம்.   தாரணி:  பூமி.  பத்துத்  தேர்   கொண்டு.
தன்னுடன்  போர்புரிந்த சம்பானை வென்றவன் என்பதால்  “தசரதன்”
என்று  பெயர்  பெற்றான்  என்பர்.  தசம்:  பத்து.  ரதன்:  ரதங்களை
வென்றவன்.   வெஞ்சினத்து  அவுணர்  தேர்பத்தும்   வென்றுளேன்”
என்பது தயரதன் தன்னைப் பற்றிக் கூறிக் கொள்வதாகும்.

மதலை:     விழுது. புதல்வருக்கு  ஆகிவந்தது  உவமையாகுபெயர்.
வருதும்:   தன்மைப்   பன்மை   வினைமுற்று   யாம்  வருதும்  என
முடியும்.                                                  21
 

201.

‘வளையொடு திகிரியும். வடவை தீதர
விளைதரு கடுவுடை விரிகொள் பாயலும்.
இளையவர்கள் என அடி பரவ ஏகி. நாம்.
வளைமதில் அயோத்தியில் வருதும்’ என்றனன்..

 
 

வளையொடு     திகிரியும்-  எமது  படைக்கலங்களான  சங்கும்
சக்கரமும்; வடவை தீதர விளைதரு கடு உடை விரிகொள்பாயலும்-
வடவா முகாக்கினியும் தீய்ந்து போகச் செய்யும் நஞ்சினை உடைய.