132பால காண்டம்  

எமதுபடுக்கையான    அனந்தனும்; இளையவர்கள் என அடி  பரவ-
தம்பியராகப்   பிறந்து   எம்மை   அடிவணங்க;  ஏகி.  வனைமதில்
அயோத்தியில் வருதும் என்றனன்
-பூமியில் சென்று சுற்றும் வளைந்த
மதிலை உடைய அயோத்தி மாநகரில் அவதரிப்போம் என்றான்.

‘வினையொடு’என்பதிலுள்ள     ‘ஒடு’ உம்மைப் பொருளில் வந்தது.
வளை:  சங்கு.  வளைந்திருப்பது  காரணமாக  இப்பெயர்  அமைந்தது.
கடல்   நடுவே   ஒரு   குதிரை  இருப்பதாகவும்.  அதன்   முகத்தில்
தோன்றும்    தீயில்   கடல்   நீர்   வற்றிக்   கொண்டிருப்பதாகவும்
கூறுவர்.வடவை  முகத்தில்  தோன்றும்  தீ  என்பதால்  “வடவைத் தீ”
என்றார்.  தடு:  நஞ்சு. பாயல்: படுக்கை. விரிகொள்: விரிதலை உடைய
சக்கரம்    பரதனாகவும்.    சங்கு   சத்துருக்கனாகவும்.    அனந்தன்
இலக்குவனாகவும்  வந்தனர்  என்பார்.  அயோத்திக்கு ‘சாதேகம்’ என்ற
ஒரு பெயரும் உண்டு.                                      22
 

202.

என்று அவன் உரைத்தபோது. எழுந்து துள்ளினார்; 
நன்றிகொள் மங்கல நாதம் பாடினார்;-
‘மன்றல் அம் செழுந் துளவு அணியும் மயனார்
இன்று எமை அளித்தனர்’ என்னும் ஏம்பலால்
 

என்று அவன் உரைத்த போது- அத்திருமால் கூறியருளிய போது
கேட்ட  (அத்தேவர்கள் அனைவரும்); மன்றல் அம் துளவு அணியும்
மாயனார்
-   மணம்  பொருந்திய.  அழகிய  துழாய்மாலை  அணியும்
மாயனாகிய திருமால்;இன்று எமை அளித்தனர் என்னும் ஓம்பலால்-
இன்று   எங்களை   யெல்லாம்   காப்பாற்றி   அருளினார்  என்னும்
மகிழ்ச்சியால்; எழுந்து   துள்ளினார்  நன்றிகொள்  மங்கல நாதம்
பாடினார்
-  எழுந்து  நின்று ஆடினார்கள் நன்மையான  மங்கல கீதம்
பாடினார்கள்.

துள்ளுதல்:     ஆடுதல்.  நன்றி:  நன்மை.  மங்கலம்: சுபம். இங்கு
வெற்றிக் குறித்து நின்றது. நாதம்: ஓசை.  இசையைக்  குறித்தது. மன்றல்:
மணம்.  மாயம்:  சாமர்த்தியம் அதனை  உடையவன்  மாயன்.  ஏம்பல்:
மகிழ்ச்சி.   திருமால்   கூறியது   கேட்ட   தேவர்கள்   மகிழ்ச்சியால்
ஆடிப்பாடினர் என்பது கருத்து.                               23
 

203.

‘போயது எம் பொருமல்’ என்னா.
   இந்திரன் உவகை பூத்தான்;
தூய மா மலர் உளோனும்.
   சுடர்மதி சூடினோனும்.
சேய் உயர் விசும்பு உளோரும். ‘தீர்ந்தது
   எம் சிறுமை’ என்றார்;
மா இரு ஞாலம் உண்டோன்.
   கழலுன்மேல் சரணம் வைத்தான்.
 

‘எம் பொருமல் போயது என்னா- எங்கள் துயரம் தீர்ந்தது என்று
கூறி; இந்திரன்  உவகை பூத்தான்- இந்திரன் மகிழ்ச்சி  அடைந்தான்;
தூய  மா  மலர் உளோனும்
-  தூய  அழகிய  தாமரையில்  வாழும்
பிரமனும்;   சுடர்   மதி   சூடினோனும்-  ஒளியுடைய  சந்திரனைத்
தலையிலணிந்துள்ள சிவபெருமானும்; சேய் உயர் விசும்பு உளோரும்-
மிக உயர்வான விண்ணுலகிலே வாழ்பவர்களும்; தீர்ந்தது