41

இராமாயண நூல்கள்

சமஸ்கிருதம்
 

1. வான்மீகி இராமாயணம் (கி.மு. 3 அல்லது 4ஆம் நூற்றாண்டு)
(வட புல, தென் புல வழக்குகள்)

இராமகாதை நுவலப்படும் பிற சமஸ்கிருத நூல்கள்

1. மகாபாரதம் : (நான்கிடங்களில்)

ஆரணிய பருவம் 147:28-38; 252-275
துரோண பருவம் 59:1-31
சாந்தி பருவம் 22;51-62
ஏறக்குறைய 700 பாடல்களில் இராமகாதை குறிக்கப்படுகிறது. 

2. புராணங்கள் : (முதன்மையானவை)

1. விஷ்ணு புராணம் (கி.பி. 4) (  IV, 4,5)
2. பிரும்மானந்த புராணம் (கி.பி. 4) (2. 21)
3. வாயு புராணம் (கி.பி. 5) ( II.26) விஷ்ணு புராணம் போன்றது.
4. பாகவத புராணம் (கி.பி. 6) (IX 10-11) இங்குதான் சீதை
  திருமகளின்அவதாரம் என்னும் செய்தி முதலில் கூறப்படுகிறது.
5. கூர்ம புராணம் (கி.பி. 7) (.19: 1; II 34)
6. அக்கினி புராணம் (கி.பி. 8-9) (.5-12) வான்மீகியின் சுருக்கம்
7. நாரதர் புராணம் (கி.பி. 10) (1. 79;  II.75) வான்மீகியின் சுருக்கம்.
8. பிரம்ம புராணம் - அரிவம்சத்தின் சுருக்கம்.
9. கருட புராணம் (கி.பி. 10) பெரும்பான்மையும் பிற்கால
  இடைச்செருகல்கள்
10. ஸ்கந்த புராணம் (கி.பி. 8க்குப் பின்) (II : 30) சிற்சில செய்திகள்
11. பத்ம புராணம் (கி.பி. 12-15) (116 படலம், உத்தர 24, 43,44)