81

காதுவரை தானிழுத்து
கண்ணபிரான் இழுத்து விட்டார்
அந்த நல்ல அஸ்திரம் தான்
அதிவேகமாய் தானும் வந்து
தாடகையாள் மார்பதிலே
தானே வந்து பாய்ந்திடுமாம்

“சுவாமி நான் மாயன் என்று அறியாமல் மாபாவி கெட்டு விட்டேன்.
தங்கள்  கையினால்  நான் மடிவதற்கு என்ன  தவமிருந்தேனோ. என்
பெயர்  இவ்வுலகத்தில்  எப்போதும்  விளங்கும்படியாக  எனக்கு ஒரு
வரம் கொடுக்க வேணு”மென்று வணங்கினாள்.

அப்போது எம்பெருமான்
தென்கிழக்கு மூலையிலே
திடமுடனே உதித்திடுவாய்
தாடகை வெள்ளியென்று
தாரணியில் சொல்லிடுவார்
என்று சொல்லி எம்பெருமான்
ஏற்றவரம் தான் கொடுத்தார்!

இந்த  விதமாக  எம்பெருமான்  தாடகைக்கு  நட்சத்திரப் பதவி வரம்
கொடுக்கவும் தாடகையின் உயிர் பிரிந்தது.19

தொகுப்புரை

தாடகை  வதத்தைப் பௌத்த, ஜைன ராமாயணங்கள் பாடவில்லை.
பாடியுள்ள   நூல்களிலிலும்   துளசி  ராமாயணம்  போன்றன  மிகச்
சுருக்கமாக  இந்  நிகழ்ச்சியைக்  கூறுகின்றன. தெலுகு ராமாயணங்கள்
வான்மீகியைப்  பின்பற்றிச்   செல்கின்றன.  வான்மீகியைப்  பெரிதும்
பின்பற்றும் குமாரன்வான்மீகி விசுவாமித்திரர் இராமன் உரையாடலைச்
சற்று விளக்கமாகப் பாடுகிறார். செய்தியில் மாற்றங்கள் இல்லை. துளசி
ராமாயணத்தில்   முனிவரின்   ஆணையால்  தாடகையைக்  கொல்ல
இசைந்தானாயினும்,     அவள்மீது    கொண்ட    பெண்ணென்னும்
இரக்கத்தால்,   இராமன்   தாடகைக்கு   நற்கதி  அளித்தான் என்று
கூறப்படுகிறது. பிற இராமாயணங்களில் இச் செய்தி கூறப்பெறவில்லை.
கம்பனைப்  பின்பற்றிச்  செல்லும்  இயல்பினதாகிய  சீதா கல்யாணம்
என்னும்  வில்லுப்பாட்டு,  இராமன்  தாடகைக்கு, “நட்சத்திரப் பதவி”
தந்து   அருள்  செய்தான்  என்று  கூறுகிறது.  ஆனால்,  கம்பனில்
இச்செய்தி காணப்படவில்லை. கம்பன் கழக மிகைப்பாடல்களிலும்


19. தி.சி. கோமதி நாயகம். பக். 212-217