40

நிறுத்த ஆற்றலின்மையின் வேண்டா வெறுப்புடன் வேறு வழியின்மையின்
தீமைக்குத் துணை போகின்றனர். இன்றைய சமுதாயத்தில் வாழும் நம்மில்
பலர் மாரீசனுடைய நிலையில்தான் இருக்கின்றோம். காப்பிய மாந்தரில் மனித
சமுதாயம் பிரதிபலிக்கப்படுகிறது என்பது ஆரணிய காண்டத்தில் நன்கு
அறியப்படுகிறது.