பக்கம் எண் :

  நாட்டுப் படலம்45

முடு   இல் அட்டில்- (வேண்டும் பொருள்களில்) குறைவு இல்லாத
சமையல்   அறையில்;  முழங்குற வாகிய- ஒலித்தல் பெருகும்படி கீழே
வடிக்கப்பட்ட;  நெட்டுலைக்  கழுநீர்-  பெரிய உலையில் வைப்பதற்கு
முன் (அரிசி)  கழவிய நீரின்; நெடு நீத்தம்தான்- மிக்க வெள்ளமானது;
பட்டம்  மென்  கமுகு
-  நீரோடைக் கரையில் உள்ள பாக்கு மரங்கள்;
ஓங்கு  படப்பை  போய்
-  உயர்ந்து  வளர்ந்துள்ள  சோலை  வழயே
சென்று; நட்ட செந்நெலின் நாறு வளர்க்கும்- வயலில் நடப்பட்டுள்ள
செந்நெல் நாற்றுகளை வளர்க்கும்.

சமையலுக்கு   வேண்டிய எல்லாப் பொருள்களும் நிறைந்திருத்தலின்
‘முட்டு  இல் அட்டில்’ என்றார். அரிசி  கழுவிக் கொட்டிய நீர். கமுகுத்
தோட்டம்  வழியே  பய்ந்து  வயலில்    நடப்பட்ட  நெல் நாற்றுகளை
வளர்க்கும் என்பதால். சமைக்கும் உணவின்    மிகுதியையும் உண்போர்
மிகுதியையும் உணர்த்தினார்.

பட்டம்: நீரோடை. கமுகு: பாக்கு மரம்.
   முழங்கு(தல்) - முதனிலைத் தொழிற்பெயர்.                  26
 

58.சூட்டுடைத் துணை தூ நிற வாரணம்
தாள்-துணைக் குடைய. தலை சால் மணி
மேட்டு இமைப்பன; ‘மின்மினி ஆம்’ எனக்
கூட்டின் உய்க்கும. குரீஇயின் குழாம்அரோ.
 

சூட்டு     உடைத்  துணை-   உச்சிக்  கொண்டை  உடையதும்
துணையானதுமான; தூநிற வாரணம்-  தூய நிறத்தையுடைய சேவல்கள்;
தாள்  துணைக்குடைய
- தம் கால்களால்  (குப்பைகளைக்) குடைவதால்;
தகை சால் மணி
- தகுதி மிக்க  மாணிக்கங்கள்; மேட்டு இமைப்பன -
(அந்தக்  குப்பை)  மேடுகளில்  ஒளிரும்; குரீஇயின் குழாம்-  குருவிக்
கூட்டம்;  ‘மின்மினி  ஆம்’  என-  (அந்த  மணிகளை)  மின்மினிப்
பூச்சிகள்   என்று  நினைத்து;  கூட்டின்  உய்க்கும்-  தம்  கூடுகளில்
கொண்டு போய் வைக்கும்.

கோழிகள்      குப்பையைக்   கிளறும்போது  அக் குப்பைமேட்டில்
ஒளிர்கின்ற  மணிகளை  மின்மினிப்  பூச்சி  எனத்    தவறாக எண்ணி.
அவற்றை  ஒளி  தருவதற்காகக்  குருவிகள்   தம்  கூட்டில்  கொண்டு
சேர்க்கின்றனவாம்.  மயக்கத்தால் நிகழ்வதைக்   கற்பித்துச் சொல்வதால்
இது மயக்க அணியாம்.

இதே     கற்பனைக் காட்சியைக்    கம்பரே  பின்னரும் தருகிறார்:
“எரியும்   மின்மினி   மணி   விளக்கின்  இன்துணைக்  குரீஇயினம்
பெடையொடு துயில்வ” (4234)


‘உடைய’ என்ற சொல் அகரம் குறைந்து ‘உடை’ என நின்றது.     27
 

59.தோயும் வெண் தயிர் மத்து ஒலி துள்ளவும்.
ஆய வெள் வளை வாய்விட்டு அரற்றவும்.
தேயும் நுண் இடை சென்று வணங்கவும்.
ஆயர் மங்கையர் அங்கை வருந்துவார்.