பக்கம் எண் :

  நாட்டுப் படலம்47

                                             நானில வளமை
 
61.குற்ற பாகு கொழிப்பன - கோள் நெறி
கற்றிலாத கருங் கன் நுளைச்சியர்
முற்றில் ஆர முகந்து. தம் முன்றிலில்.
சிற்றில் கோலிச் சிதறிய முத்தமே.

 

கோள் நெறி கற்றில்லாத- ஆடவரின் இதயம் கவர்ந்து கொள்ளும்
வழியைக்   கற்றறியாத;  கருங்கண்  நுளைச்சியர்-  கருமை  நிறமான
கண்களை   உடைய   நெய்தல்   நிலத்துப்  பெண்கள்;  குற்ற  பாகு
கொழிப்பன
-   தறிக்கப்பட்ட  பாக்கிலிருந்து கொழித்து நீக்கப்படுபவை;
முற்றில் ஆர முகந்து
- சிறிய முறங்களில் வாரி வந்து; தம் முன்றிலில்
சிற்றில்  கோலி
-  தம்  வீட்டின்  முற்றத்தில்  சிறு வீடு கட்டி; சிதறிய
முத்தமே
- சிந்துகின்ற முத்தங்களே யாகும்.

முற்றத்தில்     முத்துக்களைக் கொண்டு பேதைப் பருவத்து சிறுமியர்
சிற்றில்    அமைக்கின்றன. பின்னர் குற்றிய பாக்குகளைச் சிறு முறத்தால்
நிறைய    வாரிக்  கொழிக்கின்றனர். கொழிக்கும் போது நீக்கப் படுவன
எவை?    சிற்றில்     அமைக்க   உதவிய   முத்துகளே   கொழித்து
நீக்கப்படுகின்றன.

நெய்தல்     நிலத்து முத்தையும் மருத நிலத்துப் பாக்கையும் மயங்க
(கலந்திட)ச்    செய்து  இப்பாடலின்  கற்பனை  இயங்குவதால்  திணை
மயக்கம்.


பாகு: இடைக்குறை. கோள்-முதனிலை நீண்ட தொழிற் பெயர்.      30
 

62.துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்தெனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி. மால் வரைச் சூல் மழை மின்னுமே.

 

துருவை  மென் பிணை- செம்மறி இனத்தின் மென்மையான பெண்
ஆடு;  ஈன்ற-  பெற்ற;  துளக்கு இலா- அச்சம் காரணமான அசைதல்
இல்லாதனவும்;   வரி   மருப்பு   இணை-  வரிகள்  அமைந்த  இரு
கொம்புகளை உடையனவும்; வன் தலை ஏற்றை- வலிய தலைகளையும்
உடைய  கடாக்கள்;  வான் உரும் இடித்தென- மேகத்தில் உள்ள இடி
இடித்ததைப்  போல; தாக்குறும்  ஒல்  ஒலி வெருவி- ஒன்றை ஒன்று
முட்டுதலால் எழும் ஒல்லென்ற ஒலி கேட்டு அஞ்சி; மால் வரைச் சூல்
மழை
- பெரிய மலையில்   படிந்துள்ளதும் சூல் கொண்டதுமான மேகம்;
மின்னும்
- மின்னலிடும்.

செம்மறிக்     கடாக்கள் ஒன்றுடன் ஒன்று மோதித் தாக்க. அதனால்
எழும்  ஒலி  கேட்டு     அஞ்சிய மேகங்கள் மின்னும் என்பது கருத்து.
மென்மை   கொண்ட     பெண்  செம்மறியிடத்துப்  பிறந்த  கடாக்கள்
ஆண்மையால்    வன்மை     பெற்றிருப்பதை   நோக்குக.   துருவை:
செம்மறியாடு