முல்லை (செம்மறி) குறிஞ்சி (மலை முகட்டு முகில்) மயங்கிய திணை மயக்கம். |
துளக்கு. தாக்கு-முதனிலைத் தொழிற் பெயர்கள் இல்லாத. இல்லா. இலா; ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஏற்றை என்பதில் ஐகாரம் சாரியை இடித்தென-இடித்தால் என; ‘ஒல்’: ஒலிக் குறிப்பிடைச் சொல். 31 |
| 63. | கன்றுடைப் பிடி நீக்கிக் களிற்றினம் வன் தொடர்ப் படுக்கும். வன வாரி சூழ் குன்றுடைக் குல மள்ளர் குழூஉக் குரல். இன் துணை களி அன்னம் இரிக்குமே. |
கன்றுடைப் பிடி நீக்கி- கன்றுடைய பெண் யானைகளை நீக்கிவிட்டு; களிற்றினம் வன் தொடர்ப் படுக்கும்-ஆண் யானைகளை வலிய சங்கிலிகளால் கட்டுகின்ற; வன வாரி சூழ்- காட்டிலே யானைகளை அகப்படுத்தும் இடங்களைச் சூழ்ந்த; குன்றுடைக் குல மள்ளர்- மலையை வாழும் இடமாகக் கொண்ட நல்ல வீரர்களின்; குழூஉக் குரல்- கூட்டம் எழுப்பும் ஆரவாரம்; இன் துணைக் களி அன்னம்- இனிய துணையாகிய பெண் அன்னங்களுடன் மகிழ்ந்திருக்கும் ஆண் அன்னங்களை; இரிக்கும்- (அச்சத்தால் நிலை கெட்டு) ஓடச் செய்யும். பிடிகளையும் கன்றுகளையும் விடுத்துக் களிறுகளை மள்ளர்கள் சங்கிலியால் பிணிக்கும்போது எழும் ஆரவார ஓசையால் களித்திருக்கும் அன்னம் அச்சத்தால் நிலை கெட்டு ஓடும் என்பது கருத்து. குறிஞ்சியும் (களிறுகள்) மருதமும் (அன்னம்) மயங்கிய திணை மயக்கம். தொடர்: சங்கிலி. வாரி: யாயைப் பிடிக்க வெட்டப்படும் குழி. 32 |
| 64. | வள்ளி கொள்பவர் கொள்வன. மா மணி; துள்ளி கொள்வன. துங்கிய மாங்கனி; புள்ளி கெள்வன. பொன் விரி புன்னைகள்; பள்ளி கொள்வன. பங்கயத்து அன்னமே. |
வள்ளி கொள்பவர்- வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுப்பவர்கள்; கொள்வன மாமணி- பெறுவது உயர்ந்த மணிகளாகும்; தூங்கிய மாங்கனி- கிளைகளில் தொங்கும் மாம்பழங்கள்; து(ள்)ளி கொள்வன- தேன் துளிகளைக் கொண்டிருக்கும்; பொன்விரி புன்னைகள்- பொன் நிற மகரந்தங்களைப் பரப்பும் புன்னை மலர்கள்; புள்ளி கொள்வன- புள்ளிகளைப் பெற்றிருக்கும்; அன்னம்- அன்னப் பறவைகள்; பங்கயத்து- தாமரை மலர்களிலே; பள்ளி கொள்வன- தூங்கியிருக்கும். |
வள்ளிக் கிழங்குபெற நிலந் தோண்டுபவர்க்குப் பெருமதிப்புடைய மணிகள் கிடைக்கின்றன. சிறந்த மாங்கனி: தேனெனச் சொட்டும் சாறு கொண்டவை. |