பக்கம் எண் :

  நாட்டுப் படலம்49

....துள்ளி      என்ற சொல்லுக்கு ஆமை என்ற பொருளும் உண்டு.
அவ்வாறு    கொண்டால்     ஆமைகள்   உண்ணுவதற்கு   மாங்கனி
கிடைக்குமெனப் பொருள் உரைக்க.

 வள்ளி. புன்னை. பங்கயம் - ஆகு பெயர்கள்.               33
 

65.கொன்றை வேய்ங்குழல் கோவலர் முன்றிலில்
கன்று உறக்கும்-குரவை. கடைசியர்.
புன் தலைப் புனம் காப்புடைப் பொங்கரில்
சென்று இசைக்கும்-நுளைச்சியர் செவ்வழி.
 

கடைசியர்  குரவை  -  மருத நில மாதர்களின் குரவைக்  கூத்துப்
பாடல்; கொன்றை     வேய்ங்குழல்    கோவலர்    முன்றிலில்-
கொன்றையாலும்    மூங்கிலாலும்    ஆகிய   குழல்களை     உடைய
இடையர்களின்  வீட்டு  முற்றங்களில்;  கன்று  உறக்கும்-  கன்றுகளை
உறங்கச்  செய்யும்;  நுளைச்சியர்  செவ்வழி-  நெய்தல்  நில மகளிர்
பாடும்  செவ்வழிப்  பண்  கொண்ட  பாடல்;  புன்  தலைப்  புனம்-
சிற்றிடம்  கொண்ட  புனங்களிலும்;  காப்புடைப்  பொங்கரில்;  காவல்
உடைய   சோலைகளிலும்;   சென்று   இசைக்கும்-  பரந்து  சென்று
ஒலிக்கும்.

கொன்றைக்  கனியையும் மூங்கிலையும் துருவித் துளையிட்டுக்  குழல்
செய்வர்.   உறக்கும்-உறங்கச்   செய்யும்.  செவ்வழிப்    பண்  காலை
நேரத்துக்கு உரியது.

முல்லையும்     (கொன்றை)    மருதமும்    (கடைசியர்) நெய்தலும்
(நுளைச்சியர்)  கலந்த   திணை   மயக்கம்.  முன்றில்-இல்முன் என்தன்
போலி. உறக்கும்-பிறவினை.                                34
 

66.சேம்பு கால் பொரச் செங்கழுநீர்க் குளத்
தூம்பு கால. சுரி வளை மேய்வன-
காம்பு கால் பொர. கன் அகல் மால் வரை.
பாம்பு நான்றெனப் பாய் பசுந் தேறலே.
 

காம்பு கால் பொர- மூங்கில் புதரில் காற்று மோதுதலால் (தேன்கூடு
சிதைய);   கண்    அகல்   மால்   வரை-   விசாலமான   பெரிய
மலைகளிலிருந்து;  பாம்பு நான்றென- பாம்புகள் தொங்குவது  பொன்ற
தோற்றத்துடன்;  பாய்   பசுந்   தேறல்-   பாய்கின்ற  புதிய  தேன்
ஒழுக்கினையே;  சேம்பு  கால்  பொர-  சேப்பங் கொடியின் மடல்கள்
ஒடியும்படி;  செங்கழுநீர்க் குளத் தூம்பு கால்- செங்கழு நீர்ப் பூக்கள்
கொண்ட  குளத்தின்  மதகுகளிலிருந்து  பரவும் வாய்க்கால்களில்; கரி
வளை மேய்வன
- வளைந்த சங்குகள் மேய்கின்றன.

‘பசுந்     தேறலைச்’ கரி வளை மேய்வன’ எனக் கூட்டிப் பொருள்
கொள்க.  தூம்பு  மதகு.  மூங்கில்  காற்றில்  ஆடும்போது  மலையில்
தொடுத்த தேனடை