பக்கம் எண் :

52பால காண்டம்  

70.

கூற்றம் இல்லை. ஓர் குற்றம் இல்லமையால்;
சீற்றம் இல்லை. தம் சிந்தனையின் செம்மையால்;
ஆற்றல் நல் அறம் அல்லது இல்லாமையால்.
ஏற்றம் அல்லது. இழித்தகவு இல்லையே.
 

ஓர்   குற்றம்  இல்லாமையால்- கோசல நாட்டில் எவரிடமும் ஒரு
குற்றமும்  இல்லாமையால்;  கூற்றம்  இல்லை- கூற்றுவனது கொடுமை
அந்நாட்டில்  இல்லை; தம்  சிந்தையின்  செம்மையால்-  அந்நாட்டு
மக்களின்  மனச்   செம்மையால்; சீற்றம் இல்லை- சினம் அந்நாட்டில்
இல்லை; நல் அறம்  அல்லது ஆற்றல் இல்லாமையால்- நல்ல அறச்
செயல்    செய்வதை தவிர வேறு எச்செயலும் இல்லையாதலால்; ஏற்றம்
அல்லது  இழிதகவு  இல்லை
-  மேன்மையைத்  தவிர  எவ்வகையான
இழிவான கீழ்மை அந்நாட்டில் இல்லை.

கூற்றம்     இல்லை   யென்பதால் கோசல நாட்டில் சாவே இல்லை
என்பது  பொருளாகாது.    இயற்கை  மரணமின்றி  இடையறவுபடுகின்ற
அற்பாயுட் சாவு இல்லை  என்பதே கருத்து. குற்றமே காக்க பொருளாக;
குற்றமே    அற்றம்   தரூஉம்   பகை   என்ற  குறள்  (434)  இங்கு
நினைவுகூரத் தக்கது.

   ஓர்- குறுக்கல் விகாரம்.                                39
 

71.

நெறி கடந்து பறந்தன. நீத்தமே;
குறி அழிந்தன. குங்குமத் தோள்களே;
சிறிய. மங்கையர் தேயும் மருங்குலே;
வெறியவும். அவர் மென் மலர்க் கூந்தலே.
 

நெறி  கடந்து பரந்தன நீக்கமே   -  செல்லும் வழிகடந்து பரந்து
செல்வது  (அந்த நாட்டில்) வெள்ளமேயாம்;  குறி அழிந்தன குங்குமத்
தோள்களே
-   அடையாளம்   அழிந்தவை   அந்த  நாட்டு  மகளின்
குங்குமம்   அணிந்த   தோள்களேயாம்;  சிறிய  மங்கையர்  தேயும்
மருங்குலே
-     அங்குச்     சிறியவை     பெண்களின்    மெல்லிய
இடைகளேயாம்; வெறியவும்  அவர்  மென்மலர்க்  கூந்தலே- மணம்
உடையவை அந்த நாட்டுப் பெண்களின் மலர்சூடிய கூந்தலேயாம்.

நெறி     கடத்தல்: வழி தவறி நடத்தல். வெள்ளம் தான் நெறிகடந்து
செல்லுமே   யல்லாது   அந்நாட்டு  மக்கள்  வழித்  தவறான  வழியில்
செல்லமாட்டார்கள்.     செய்து  குறியழிந்தவை  குங்குமத்  தோள்களே
தவிர.  தமக்குரிய   குறியிலிருந்து மக்கள் மாறுபடமாட்டாகள். சிறியவை
தேயும்  மருங்குலே    அல்லாது  வேறு  சிறிய செயல்கள் அந்நாட்டில்
நிகழா. வெறியவும்   கூந்தலே அல்லது வெறி கொண்டு அலையும் நிலை
அங்கில்லை.  குறி:     தானியக்  குவியல்-  முதலியவற்றிற்குச் செய்யும்
அடையாளம்.  இது    சிலேடை  பற்றி வந்த ஒழிப்பணி. வெறி: மணம்
வெறுமை  அல்லது  குடி    வெறி என்பதும் பொருளாம். 38-ம் பாடல்
தொடங்கி  இப்பாட்டு    முடிய அந்த நாட்டு மக்கள் நல்லன கொண்டு.
அல்லன நீக்கி வாழ்ந்த வாழ்வு பேசப்பட்டது.                  40