பக்கம் எண் :

56பால காண்டம்  

நெல்மலை    அல்லன  - அந்த நாட்டில் நெற் குவியல்களில்லாத
இடங்களில்;   நிரைவரு   தரளம்-   வரிசை   வரிசையாக   முத்துக்
குவியல்கள்  காணப்படும்;   சொல்மலை  அல்லன-  சொன்ன  அந்த
முத்துக்  குவியல்கள் இல்லாத  இடங்களில்;  தொடுகடல்  அமிர்தம்-
தோண்டப்பட்ட  கடலில் எடுத்த   உப்புக் குவியல்கள் நிறைந்திருக்கும்;
நன்மலை  அல்லன
- அந்த உப்புக் குவியல்கள்  இல்லாத இடங்களில்;
நதிதரு  நிதியம்
-  நதிகளால்  கொண்டுவந்து  குவிக்கப்பட்ட  பொன்
முதலிய  பொற்  குவியல்களில்  பல  இடங்களில்; மணிபடு புளினம்-
மணிகள் நிறைந்த மணல் மேடுகள் இருக்கும்.

கோசல   நாட்டில் நெல்லும். முத்தும். உப்பும். பொன்னும். மணியும்
எங்கும்  குவிந்து  மலைகளைப்  போல  மண்டிக்  கிடந்தன   என்பது
கருத்து. புளினம்: மணல் திட்டு.                             47
 

79.பந்தினை இளையவர் பயில் இடம். - மயில் ஊர்
கந்தனை அனையவர் கலை தெரி கழகம். -
சந்தன வனம் அல. சண்பக வனம் ஆம்;
நந்தன வனம் அல. நறை விரி புறவம்;
 

பந்தினை   இயையவர் பயில் இடம்- அந்நாட்டு இளம் பெண்கள்
பந்து  விளையாடும்  இடங்கள்;  சந்தன  வனம் அல சண்பக வனம்
ஆம்
- சந்தனச் சோலைகளே   ஆயினும் அவர்களது மேனி மணத்தால்
சண்பகச் சோலைகளாகும்; கந்தனை அனையவர் கலை தெரி கழகம்-
முருகனை    ஒத்த     ஆடவர்கள்   வில்   முதலிய   கலைகளைப்
பயிலுமிடங்கள்; நந்தன வனம் அல நறை விரிபுறவம்- பல மலர்களை
உடைய  நந்தனவனங்களே  ஆயினும்    ‘அவர்தம்’ மேனி மணத்தால்
முல்லைக்காடுகளாக விளங்கும்.

பெண்களின்     மேனி சண்பக மணமும். ஆடவர் மேனி  முல்லை
மணமும்  உடையராதலின்  மகளிர்  பந்தாடுமிடம்  சண்பகச்   சோலை
ஆயின.  ஆடவர்  கலை  பயிலுமிடம்  முல்லைக்  காடாக   மணந்தன
என்பர்.  “ஆண்கள்  மேனிக்கு  முல்லை  மணம்”   இயல் பென்பதை
“மன்னொடும் தோளே முல்லை முகை நாறும்மே” என்று   குறுந்தொகை
(193)  வரிகளால்  அறியலாம்.  இளையவர்  என்பது இளம்   வயதினர்
என்ற    பொருள்   உடையதாயினும்   பந்தாடுதல்     பாவையர்க்கே
உரியதாதலின் ‘இளையவர்’ இளம் பெண்கள் புறவம்: காடு.       48
 

80.கோகிலம் நவில்வன. இளையவர் குதலைப்
பாகு இயல் கிளவிகள்; அவர் பயில் நடமே
கேகயம் நவில்வன; கிளர் இள வளையின்
நாகுகள் உமிழ்வன. நகை புரை தரளம்.