பக்கம் எண் :

  நாட்டுப் படலம்57

கோகிலம்    நவில்வன- குயில்கள் கற்றுப் பேசுவன; இளையவள்
குதலைப்  பாகு  இயல்  கிளவிகள்
- அந்நாட்டுப்  பெண்களின் பாகு
போன்ற இனியனவாகிய மழலைச் சொற்களையாம்;  கேகயம் நவில்வன
அவர்  பயில்  நடமே
-  மயில்கள் நடந்து பழகுவன  அப்பெண்களின்
நடையையாம்; கிளர் இள வளையின் நாகுகள்- விளங்கும் இளம்பெண்
சங்குகள்;  உமிழ்வன  நகை புரைதரளம்- உமிழ்வது அப்பெண்களின்
பற்களை ஒத்த முத்துக்களையேயாம்.

இள   மகளிரைப் போலக் குயில்கள் பேசும்; அவர்களது நடையைப்
போல மயில்கள் நடக்கும்; குயிலும் மயிலும்   உவமானங்கள் அவற்றை
உவமேயங்களாக்கிக்    கூறியதால்   இது    “எதிர்நிலையுவமையணி”;
எதிர்மறை  அணி என்றும் கூறுவர். பாகு இயல்  கிளவி: பாகு போன்ற
இனிய  மொழி.  கேகயம்:  மயில்.  நகை: பல்.  கிளவி: சொல். தரளம்:
முத்து                                                 49
 
 

81. 
 

பழையர்தம் மனையன. பழ நறை; நுகரும்
உழவர்தம் மனையன. உழு தொழில்; புரியும்
மழவர்தம் மனையன. மணஒலி; இசையின்
கிழவர்தம் மனையன. கிளை பயில் வளை யாழ்.
 

பழநறை   பழையர்தம்  மனையன   -  பழமையான  கள்.  கள்
விற்பவர்களின்  வீடுகளில்  உள்ளது;  நுகரும் உழவர்தம் மனையன-
அந்தக்  கள்ளைப்  பருகும்  உழவர்கள்  வீடுகளிலே;  உழுதொழில்-
உழவுத்   தொழிலுக்கான   கருவிகள்  உள்ளன;  புரியும்  மழவர்தம்
மனையன   மணஒலி
-   மணம்   புரியும்  இளைஞர்  இல்லங்களில்
மணவாத்தியங்கள்  ஒலிக்கின்றன;  இசையின் கிழவர் தம் மனையன-
இசைவல்ல  பாணர்  வீடுகளில்; கிளை  பயில்  வளை யாழ்- கிணை
என்ற நரம்பினையுடைய வளைந்த யாழ்கள் உள்ளன.

கள்   விற்போர் மனைகளில் பழங்கள் உள்ளன. அதனைப் பருகும்
உழவர்  மனைகளிலே உழவுக்குரிய கருவிகள் உள்ளன. மணம்புரியும்
இளைஞர்    இல்லங்களிலே    மணமுழவு   ஒலிக்கும்.   இசைவல்ல
பாணர்களின்   மனைகளிலே   பலவகையான   யாழ்கள்   உள்ளன.
அவரவர்க்குரிய தொழில்களைப் புரிந்து நலமாக வாழ்கின்றனர். அந்த
நாட்டு மக்கள் என அறிகிறோம்.
 
   பழையர்: கள் விற்போர். இசையின் கிழவர்: பாணர்.          50
 

82.கோதைகள் சொரிவன. குளிர் இள நறவம்;
பாதைகள் சொரிவன. பரு மணி கனகம்;
ஊதைகள் சொரிவன. உறை உறும் அமுதம்;
காதைகள் சொரிவன. செவி நுகர் கனிகள்.

 
  

கோதைகள் குளிர் இள நறவம் சொரிவன-மலர் மாலைகள் இனிய
தேனைப் பொழிவனவாம்; பாதைகள் கனகம் சொரிவன-