பக்கம் எண் :

  நாட்டுப் படலம்59

ஓர்    வறுமை   இன்மையால்- (அந்த நாட்டில்) வறுமை சிறிதும்
இல்லாததால்;  வண்மை  இல்லை-  கொடைக்கு  அங்கே இடமில்லை;
நேர்    செறுநர்   இன்மையால்
-  நேருக்கு   நேர்   போர்புரிபவர்
இல்லாததால்;  திண்மை  இல்லை-  உடல் வலிமையை எடுத்துக்காட்ட
வாய்ப்பில்லை;   பொய்   உரை இல்லாமையால்-  பொய்ம்  மொழி
இல்லாமையால்;     உண்மை    இல்லை-   மெய்ம்மை    தனித்து
விளங்கவில்லை; பல்கேல்வி மேவலால்- பலவகைக் கேள்விச் செல்வம்
மிகுந்து   விளங்குவதால்;   வெண்மை   இல்லை-  வெள்ளறிவாகிய
அறியாமை இல்லை. 

கோசலை     நாட்டில் வறுமை சிறிதும் இல்லாதலால்  வண்மையின்
சிறப்புத்  தெரிவதில்லை;  பகைகொண்டு    போர்புரிபவர் இல்லாதலால்
உடல்    வலிமையை   உணர   வழியில்லை;   பொய்     பேசுவோர்
இல்லாமையால்  உண்மையின்  பெருமை தெரிய வழியில்லை;   கேள்வி
ஞானம்  மிகுந்திருப்பதால்  அங்கு அறியாமை சிறிதுமில்லை   என்றார்.
‘யாதும். கொள்வார் இலாமைக் கொடுப்பார்களும் இல்லை’ (165)   என்று
மேலே கூறுவர்.                                          53
 
 

85.எள்ளும். ஏனலும். இறுங்கும். சாமையும்.
கொள்ளும் கொள்ளையில் கொணரும் பண்டியும்.
அள்ளல் ஓங்கு அளத்து அமுதின் பண்டியும்.
தள்ளும் நீர்மையின். தலைமயங்குமே.

 

எள்ளும்   ஏனலும் இறுங்கும் சாமையும் கொள்ளும் - எள்ளும்.
தினையும்.   சோளமும்.   சாமையும்.   கொள்ளும்;   கொள்ளையில்
கொணரும்  பண்டியும்
-  மிகுதியாகக்  கொண்டு  வரும் வண்டிகளும்;
அள்ளல்  ஓங்கு  அளத்து  அமுதின்  பண்டியும்
-  சேறு  நிறைந்த
உப்பளத்திலிருந்து;   -     உப்பைக்  கொண்டு  வரும்  வண்டிகளும்;
துள்ளும்  நீர்மையில்  தலை  மயங்கும்
-  பாரமிகுதியால்  இயல்பாக
ஓட்டிச்  செல்ல  இயலாது    ஆட்கள் தள்ளும் தன்மையால் ஒன்றுடன்
ஒன்று கலப்பதாகும்.

தலை       மயங்கும்: தம்மில் ஒன்றுபட்டுக் கலக்கும். இதற்கு இடம்
மாறுபடும்    என்று பொருள் கூறுவதுமுண்டு. ஓரிடத்தில் விளைந்த எள்
முதலியவை    அவை   விளையாத  வேறு  இடங்களுக்குக்  கொண்டு
செல்லப்படுவதால் “இடம் மாறும்” என்பதும் பொருந்தும்.         54
 

86.உயரும் சார்வு இலா உயிர்கள் செய் வினைப்
பெயரும் பல் கதிப் பிறக்குமாறுபோல்.
அயிரும். தேனும். இன் பாகும். ஆயர் ஊர்த்
தயிரும். வேரியும். தலைமயங்குமே.