பக்கம் எண் :

60பால காண்டம்  

உயரும்   சார்விலா உயிர்கள்- உயர்கதியான வீடு பேறடைவதற்கு
உரிய  ஞானமில்லாத  உயிர்கள்; செய்வினைப் பெயரும்பல்கதி- தாம்
செய்த  வினைப்பயனைத்    துய்க்க  மாறி  மாறிப்  பல பிறவிகளிலும்;
பிறக்கும்  ஆறு  போல்
- பிறக்கின்ற விதம் போல; அயிரும் தேனும்
இன்பாகும்
-  சர்க்கரையும்.  தேனும்.  இனிய  பாகும்; ஆயர் ஊர்த்
தயிரும்  வேரியும்
- இடையர் ஊர்களில் கிடைக்கும்   தயிரும் கள்ளும்
ஆகியவை; தலைமயங்கும்- இடம் மாறுபடும்.

ஓரிடத்தில்      உற்பத்தியாகும்  அயிர்  முதலிய வேறிடங்களுக்குக்
கொண்டு    செல்லப்படுவதற்கு.    உயர்கதியடையும்    வாய்ப்பில்லாத
உயிர்கள்  வேறு  வேறு  பிறவிகளில்  மாறிப் பிறத்தல்   உவமையாகக்
கூறப்பட்டது.  “உயிரும்  சார்பாவது   அஞ்ஞான   வயத்தால்  பிறந்து
இறந்து   தாழ்ந்த   கதிகளிற்   செல்லுதல்    ஒழிந்து.   மோட்சத்தை
அடைதற்குக் கருவிகளாகிய மெய்ஞ்ஞானம்” -இராமசாமி   நாயுடு உரை.
இறைவனை     அடைவதற்குரிய    ஏதேனும்    ஒரு      நெறியைக்
கடைப்பிடித்து-பிறவித்   துன்பத்திலிருந்து  ஈடேறுவதே    உயிர்களின்
கடமை  என்பதனை இதனால் உணர்த்தினார். பல்கதி:   மக்கள். தேவர்.
நரகர்.  விலங்கு என்னும் நான்கு கதிகளாம். அயிர்: கண்ட    சருக்கரை
செய்வினை:  தாம்  செய்த  நல்வினை  தீவினைகள் 52-ஆம்    பாட்டு
முதல்    இதுவரை    அந்த    நாட்டின்    வறுமை     இன்மையும்
வளப்பெருக்கமும் கூறப்பட்டன.                             55

                                       விழாவும் வேள்வியும்
 

87.கூறு பாடலும். குழலின் பாடலும்.
வேறு வேறு நின்று இசைக்கும் வீதிவாய்.
‘ஆறும் ஆறும் வந்து எதிர்ந்த ஆம்’ என.
சாறும் வேள்வியும் தலைமயங்குமே.

 

கூறு பாடலும்- இசை வல்லுநர் பாடுகின்ற வாய்ப்பாட்டும்; குழலின்
பாடலும்
- புல்லாங் குழலால் இசைக்கும் பாட்டும்; வேறு வேறு நின்று-
தனித்தனியாக  நின்று;  இசைக்கும்  வீதிவாய்- ஒலிக்கும் வீதிகளிலே;
ஆறும்  ஆறும்  வந்து  எதிர்ந்த  ஆம்என
- ஒரு ஆறு. மற்றொரு
ஆற்றுடன்  வந்து  எதிர்ப்பட்டதெனக்  கூறுமாறு; சாறும் வேள்வியும்
தலை மயங்கும்
- விழாவுக்காகவும் திருமணத்துக்காகவும்  வரும் மக்கள்
கூட்டம் கலக்கும். 

சாறு:     விழா. வேள்வி: திருமணம்;   யாகமென்றும் கொள்ளலாம்.
பாட்டொலியும்.  குழல்  ஓசையும்  தனித்தனியே    கேட்கும் வீதிகளில்
மக்கள்   கூட்டம்   நிறைந்திருக்கும்  என்றார்.    விழாக்கள்  எனவும்
வேள்விக்கெனவும் மக்கள் கூடினர் என்பது கருத்து.              56
 
  

88.மூக்கில் தாக்குறும் மூரி நந்தும். நேர்
தாக்கின் தாக்குறும் பறையும். தண்ணுமை
வீக்கின் தாக்குறும் விளியும்.- மள்ளர்தம்
வாக்கின் தாக்குறும் ஒலியில் மாயுமே.