தம் கணங்களோடும் ஓடுகின்ற மேகம்- தம் கூட்டத்துடனே செல்லும் மேகங்கள்; எல்லை காண்கிலா நாகம் ஒன்று அகன கிடங்கை- எல்லை காண இயலாத. நாக லோகம்வரை ஆழ்ந்துள்ள பரந்த அகழியை; நாம வேலை ஆம் எனா- அச்சத்தைத் தரும் கடலாகும் எனக் கருதி; மொண்டு கொண்டு எழுந்து- நீரை முகந்து கொண்டு எழுந்து; விண் தொடர்ந்த குன்றம் என்று- அம்மதிலை வானளவும் உயர்ந்த மலை என்று கருதி; ஆகம் நொந்து நின்று- உடல் வருந்தி அம்மதிலின் மீது நின்று; தாரை அம்மதிற்கண் வீசுமே- மழைத் தாரையை அம் மதிலின்மீது பொழியும். மேகம். அகழியைக் கடல் என்று மயங்கி. அதன் நீரை மொண்டு மதிலை மலையென மயங்கி நின்று- மழை பொழியும் என்பதால் மயக்கவணியாகும். அகழியின் அகலமும் ஆழமும் மலையின் உயரமும் கூறப்பட்டது. நாம்: அச்சப் பொருளைத் தரும் உரிச்சொல். அ: சாரியை பெற்று நாம என நின்றது. 15 |