பக்கம் எண் :

80பால காண்டம்  

யுடைய   அந்தப்புரத்துப்    பெண்களின்    ஒளியுடைய முகங்களுக்கு;
முந்து  உடைந்து போன
- முன்பு தோற்றுப் போனமையால்; மொய்ம்பு
எலாம்  வந்து
-  மீண்டும்  மிக்க  வலிமை  கொண்டு  வந்து;  போர்
மலைக்க மாமதில் வளைந்தது ஒக்கும்
-போர்புரிவதற்கு அந்த மதிலை
வளைத்துக் கொண்டிருப்பதை ஒக்கும்.

மாநகரின்     மதிலைச் சூழ்ந்திருக்கும்    அகழியிலே மலர்ந்துள்ள
தாமரை   மலர்கள்-   அந்தப்புரத்து     பெண்களின்  முகங்களுக்குத்
தோற்று-  மீண்டும்  வலிமை  பெற்றுப்    போர் செய்ய அந்த மதிலை
வளைத்திருப்பதை  ஒத்திருக்கும். இது    தன்மைத் தற்குறிப்பேற்றவணி.
அயோத்தி  நகரத்துப்  பெண்களின்      அழகைச்        சிறப்பித்து
இவ்வாறு  கூறினார். அகத்து: அகழியினிடத்து. மானம்: பெருமை.   16
 

109.சூழ்ந்த நாஞ்சில் சூழ்ந்த ஆரை சுற்றும் 
   முற்று பார் எலாம்
போழ்ந்த மா கிடங்கிடைக் கிடந்து
   பொங்கு இடங்கர் மா.-
தாழ்ந்த வங்க வாரியில். தடுப்ப
   ஒணா மதத்தினால்.
ஆழ்ந்த யானை மீள்கிலாது
   அழுந்துகின்ற போலுமே.
 

சூழ்ந்த  நாஞ்சில் சூழ்ந்த ஆரை- ஆய்ந்து கட்டப்பட்ட நாஞ்சில்
முதலிய   உறுப்புகளை  உடைய  நகரைச்  சுற்றிலும்   உள்ள  அந்த
மதிலின்;  சுற்றும்  முற்று  பாரெலாம் -  சுற்றிலும்  நிறைந்திருக்கும்
பாறைகளையெல்லாம்;  போழ்ந்து    மா    கிடங்கிடை-   பிளந்து
அமைக்கப்பட்ட   அந்தப்   பெரிய  அகழியிலே;  கிடந்து  பொங்கு
இடங்கர்மா
-  தங்கி  மேலே  எழும்  முதலைகள்;  தாழ்ந்த  வங்க
வாரியில்  
- ஆழமானதும். கப்பல்களை  உடையதும் ஆகிய கடலிலே;
தடுப்ப  ஒணா மதத்தினால்
- தடுக்க இயலாத மதத்தினாலே; ஆழ்ந்த
யானை  மீள்  இலாது  
- உள்ளே அழுந்திய யானை மீள முடியாமல்;
அழுந்துகின்ற போலும்
- அமிழ்ந்து எழுவன  போலக் காணப்பெறும்.

அகழியிலே   முதலைகள் ஆழ்ந்து எழுவதற்கு. கடலிலே யானைகள்
ஆழ்ந்து  எழுவதை  உவமை    கூறினார்.  கருமை.  வலிமை. பருமை
இவைகளால்  முதலைக்கு    யானை  பண்புவமை.  நாஞ்சில்: ஏப்புழை
என்னும்  மதிலின்  உறுப்பு.    முற்றும்:  நிறைந்திருக்கும் பார்: பாசறை
“பாருடைத்த  குண்டகழி”  என்பது     புறநானூறு.  14.மா: பொதுவாக
விலங்குகளைக்  குறிக்கும்  இச்சொல்.    நீரில்  வாழும் உயிர்களையும்
பறவைகளையும் குறிப்பதுண்டு.                               17
 

110.ஈரும் வாளின் வால் விதிர்த்து.
   எயிற்று இளம் பிறைக் குலம்