பக்கம் எண் :

82பால காண்டம்  

அன்னங்களே      வெண்   குடையாகவும். முதலைகள் யானைகள்.
அலைகள்   குதிரகள்   -    மீன்கள்   வாளும்  வேலுமாக  விளங்கி
அகழியானது  மன்னர்  சேனை    போன்றிருந்தது  என்கிறார். உருவக
அணியை அங்கமாக உடைய உவமை அணி.

துரங்கம்- வேகமாகச் செல்வது. எனவே குதிரையாகும்.

   தரங்கம்- அலை.                                         19
 

112.விளிம்பு சுற்றும் முற்றுவித்து வெள்ளி
   கட்டி. உள்ளுறப்
பளிங்கு பொன்-தலத்து அகட்டு
   அடுத்துறப் படுத்தலின்.
‘தளிந்த கல்-தலத்தொடு. அச்
   சலத்தினை. தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல்
   தேவராலும் ஆவதே?
 

விளிம்பு சுற்றும் வெள்ளிக்கட்டி முற்றுவித்து - அந்த அகழியின்
ஓரம்  முழுவதும் வெள்ளியினாலே கட்டி முடித்து;  உள்ளுறப் பளிங்கு
பொன்தலத்து அகட்டு அடுத்துறப்படுத்தலின்  
-  உள்ளிடமெல்லாம்
பளிங்குக்  கற்களைத்  தள   வரிசையாகப் பதித்திருப்பதாலே; ‘தளிந்த
கல்தலத்தொடு
- பளிங்குக் கல்லால்  தளவரிசை இடப்பட்ட நிலத்தோடு;
அச்சலத்தினை
-  அந்த  அகழியின்  தெளிந்த தண்ணீரை; தனித்துறத்
தெளிந்து உணர்த்துகிற்றும்’ என்றல்
- தனியாக வேறு பிரிந்து இது நீர்
இது  பளிங்கு  என்று  தெளிவாகப்   பிறர்க்கு உணர்த்துவோம் என்று
சொல்வது; தேவராலும் ஆவதோ-தேவர்களாலும் இயலாததொன்றாகும்.

அகழியின்    விளிம்பு   வெள்ளி -   தளம் பளிங்கு; தெளிந்த நீர்
எனவே  நீருக்கும்  பளிங்குக்  கற்களுக்கும்   வேறுபாட்டை  அறிவது
தேவர்களாலும்  ஆகாதது  என்பது  கருத்து.    இங்கே அகழியின் நீர்
தெளிவாக இருப்பதாகக் குறிப்பவர் முன்னே (106)   கலங்கியிருப்பதாகக்
குறித்திருக்கிறார்.                                         20
 
                             
அகழியை வளைத்த சோலை
   

113.அன்ன நீள் அகன்
   கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி. வேறு சூழ்கிடந்த தூங்கு.
   வீங்கு. இருட் பிழம்பு
என்னலாம். இறும்பு சூழ்கிடந்த
   சோலை. எண்ணில். அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த
   நீல ஆடை போலுமே.