அன்ன நீள் அகன் கிடங்கு - அத்தகைய நீண்ட. பரந்த அகழியை; சூழ்கிடந்த ஆழியை- சுற்றிக் கிடந்த சக்கரவாள மலையை; துன்னி வேறு சூழ் கிடந்த- நெருங்கி வேறாகச் சூழ்ந்து கொண்டிருக்கும்; தூங்கு வீங்கு இருட்பிழம்பு- அசையாது. மிகுந்திருக்கும் இருள் கூட்டமோ; என்னலாம் இறும்பு - என்று சொல்லத்தக்க காடு போன்று; சூழ்கிடந்த சோலை எண்ணில் - சூழ்ந்திருக்கும் சோலையை நினைத்தால்; அப்பொன்னின் மா மதிட்கு- அந்த அழகிய மதிலுக்கு; உடுத்த நீல ஆடை போலும்- உடுத்திய நீல ஆடையைப் போலத் தோன்றும். நகரைச் சுற்றியிருக்கும் மதில் சக்கரவாள மலை; அதனைச் சுற்றியிருக்கும் அகழி. பெரும் புறக்கடல்- அகழியைச் சூழ்ந்திருக்கும் காவற் காடு. மிகுந்து பரவிய இருள் கூட்டம். இது தன்மைத் தற்குறிப்பேற்றவணி. காடு பொன் மதிலுக்கு உடுத்திய நீல ஆடை போலக் காணப்பட்டது என்பதும் தற்குறிப்பேற்றம். கிடங்கு: அகழி. இறும்பு: செயற்கைக் காடு. இதனை ‘மிளை’ என்னும் காவற்காடென்பர். நீல ஆடை கண்ணெச்சில் (கண்ணேறு) படாமைக்குச் சுட்டப்பட்டது என்ப. 21 வாயில் காடு |