ஏழ்பொழிற்கும் ஏழ் நிலத்தலம் சமைத்ததென்ன- ஏழு மேலுலகத்தவருக்கும் ஏழு இடங்களை ஏற்படுத்தி வைத்தது போல (ஏழு கிளைகள்); நூல் ஊழ் உறக் குறித்து அமைத்த- சிற்ப நூல் விதிப்படி ஆராய்ந்து அமைத்தனவான கோபுரங்கள்; உம்பர் செம்பொன் வேய்ந்து- மேலே செம்பொன் தகடு வேயப்பட்டு; மீ சூழ் சுடர்ச் சிரத்து- மேலுலகிலே சென்று ஒளிரும் சிகரத்திலே; நல் மணித் தசும்பு தோன்றலால்- சிறந்த மாணிக்கக் கலசம் தோன்றுதலால்; வாழ் நிலக் குலக் கொழுந்தை- வாழுகின்ற பூமியாகிய இளம் பெண்ணை; மௌலி சூட்டி அன்ன- முடி சூட்டியது போலத் திகழும். ஏழுநிலை அமைந்து. முற்றுப் பெற்ற கோபுரங்கள் கலசம் நிறுவப்பட்டு விளங்குவது. நில மகளுக்கு முடிசூட்டி அலங்கரித்தது போலத் திகழும் என்றவாறு; ஏழ் பொழில்- ஏழு மேலுலகத்தில் உள்ளவர்களைக் குறிக்கும்; நூல்- இங்கே சிற்ப நூலைக் குறித்தது; சிரத்து- சிகரத்திலே; தசும்பு- கலசம். அயோத்தி நகரத்து கோபுரங்களைப் பூமி தேவிக்குச் சூட்டிய மணிமுடியாகியச் சிறப்பிக்கும் நயம் மகிழ்தற்குரியது. மூன்றுபாடல்கள் எழுநிலைமாடச் சிறப்பைக் கூறுவனவாகும். 26 மாளிகைகள் |