பக்கம் எண் :

  நகரப் படலம்87

சுண்ணாம்புச்     சாந்தால்  அமைந்த; தவள  மாளிகை  - வெள்ளை
மாளிகைகள்;  வெங்கடுங்  கால்  பொர-  கடுமையான  பெருங்காற்று
வீசுவதால்;  மேக்கு  நோக்கிய-  மேல்  நோக்கி  எழுந்து;  பொங்கு
இரும்பாற்கடல்
- பொங்கும்  பெரிய பாற்கடலின்; தரங்கம் போலுமே-
அலைகளைப் போலக் காணப்படும்.

வானோங்கி     உயர்ந்து விளங்கும் வெண்ணிற மாளிகைகள்  கடும்
காற்று  வீசுவதால்  மேலெழுந்து    பாற்கடலின்  அலைகளை  ஒக்கும்
என்றதால்    நிறம்   உயர்ச்சி     இவை   பற்றி   வந்த   தன்மைத்
தற்குறிப்பேற்றவணியாகும்.  சுதை:    சாந்து.  தீற்றிய:  பூசிய.  தவளம்:
வெண்மை. மேக்கு: மேலே. கால்பொர: காற்று மோத.            27
 

120.புள்ளிஅம் புறவு இறை பொருந்தும் மாளிகை.
தள்ள அருந் தமனியத் தகடு வேய்ந்தன.
எள்ள அருங் கதிரவன் இள வெயிற் குழாம்
வெள்ளி அம் கிரிமிசை விருந்த போலுமே.

 

தள்ள  அருந் தமனியத் தகடு வேய்ந்தன- நீக்குவதற்கரிய பொன்
தகடுகள்   மேலே  வேயப்பட்டனவாகிய;  புள்ளி  அம்புறவு  இறை-
உடலில்  புள்ளிகளை  உடைய அழகிய மாடப் புறாக்கள்; பொருந்தும்
மாளிகை
-  தங்கியிருக்கின்ற  மாளிகைகள்;  வெள்ளி  அங்கிரிமிசை-
அழகிய  வெள்ளிமலையின்  மீது; எல்ல அரும் கதிரவன்- இகழ்தற்கு
அரிய  சூரிய   தேவனது;  இளவெயிற்குழாம்  விரிந்தது  போலும்-
இளையக்கதிர்கள் பரவியிருப்பது போலக் காணப்படும்.

வெண்  சுதை பூசிய வெள்ளைநிற மாளிகைகளின் மீது. பொன் தகடு
வேய்ந்து    பொலிவது.  வெள்ளிமலை மீது. கதிரவனின் இளங்கதிர்கள்
விரிந்துகிடப்பது     போன்று    விளங்கியது    என்கிறார்.   இதுவும்
தற்குறிப்பேற்ற     அணியாகும்.  புள்ளி:  உடலின்  மீதுள்ள  அழகிய
புள்ளிகள். புறவு இறை:    புறாக்களுக்கு அரசன் (மாடப்புறா). தமனியம்:
தங்கம். வெயிற்குழாம்: கதிர்களின் தொகுதி.                   28
 

121.வயிர நல் கால் மிசை. மரகதத் துலாம்.
செயிர் அறப் போதிகை. கிடத்தி. சித்திரம்
உயிர்ப் பெறக் குயிற்றிய. உம்பர் நாட்டவர்
அயிர் உற இமைப்பன. அளவு இல் கோடியே.

 

வயிர  நல்கால் மிசை- வயிரத்தாலாகிய நல்ல தூண்களின் மேலே;
மரகதத்  துலாம்
-   மரகதத்தாலாகிய   உத்தரத்தை;  செயிர்  அறப்
போதிகை  கிடத்தி
-  குறையின்றிப் பொருந்துமாறு போதிகையின் மீது
பொருத்தி; சித்தரம் உயிர் பெறக் குயிற்றிய- ஓவியங்கள் உயிருள்ளன
போலத் தோன்றுமாறு செய்தனவும்; உம்பர் நாட்டவர் அயிர் உற