பக்கம் எண் :

88பால காண்டம்  

இமைப்பன -   தேவ    நாட்டவரும்     (தமது  விமானமோ  என)
ஐயத்துடன் நோக்குவனவும் ஆகிய மாளிகைகள்;  அளவில் கோடியே-
அளவற்ற கோடிக் கணக்கானவையாகும்.

அயோத்தி    மாநகரின்    மாளிகைகள்   அளவற்றன  என்கிறார்.
துலாம்- உத்தரக் கட்டை

போதிகை-   தூண்களின் தலையில் பாரம்தாங்கும்படி வைக்கப்படும்
கட்டை.     இரு    பாலும்    கீழ்நோக்கிய    வாழைப்பூ   வடிவம்
அமைந்திருக்கும்.

 அயிர்- ஐயம்; வயிரம்- காழ்த்தல்                         29
 

122.சந்திர காந்தத்தின் தலத்த. சந்தனப்
பந்தி செய் தூணின்மேல் பவளப் போதிகை.
செந் தனி மணித் துலாம் செறிந்த. திண் சுவர்
இந்திர நீலத்த. எண்இல் கோடியே.
 

சந்திர     காந்தத்தின் தலத்த-  சந்திர காந்த்க் கற்கள்  பரப்பிய
தரையை  உடையனவும்;  சந்தன  பந்தி செய்தூணின் மேல்- சந்தன
மரங்களான  வரிசையாக உள்ள தூண்களின் மீது;  பவளப் போதிகை-
பவளத்தால்  செய்த போதிகையில்; செந்தனி மணித் துலாம் செறிந்த-
சிவந்த  மாணிக்கத்தாலான   உத்தரம்  பொருந்திய யுள்ளனவும்;  திண்
சுவர் இந்திர நீலத்து
- வண்மை மிக்க  சுவர்கள் இந்திர நீலமணிகளால்
அமைந்தனவுமான  மாளிகைகள்;  எண்ணில் கோடி-  எண்ணமுடியாத
கோடியாகும்.
 

சந்திர    காந்தம்: சந்திரஒளி பட நீர் பொழியும் தன்மையுடைய கல்
தலத்த.   செறிந்த  என்ற  எச்சங்கள்  தலத்தன.    செறிந்தன  என்று
பொருள் உடைய பெயர்ச்சொற்கள். பந்தி: வரிசை.             30
 

123.பாடகக் கால்அடி பதுமத்து ஒப்பன.
சேடரைத் தழீஇயின. செய்ய வாயின.
நாடகத் தொழிலின. நடுவு துய்யன.
ஆடகத் தோற்றத்த. அளவு இலாதன.

 

பாடகக்     காலடி- வேலைப்பாடமைந்த தூண்களின் அடிப்பக்கம்;
பதுமத்து   ஒப்பன
-   தாமரை  மலர்  வடிவத்தில்   அமைந்தனவும்;
சேடரைத்   தழீஇயின
-   கடைக்கால்   ஆழத்தால்   நாக   உலகை
தழுவியுள்ளனவும்;  செய்ய  ஆயின- வேலைப்   பாட்டினால் செம்மை
உடையனவும்;  நாடு  அகம்  தொழிலின- யாவரும் விரும்பிக் காணும்
தொழில் திறம் உடையனவும்; நடுவு துய்யன- நடுவிட மெல்லாம்