தூய்மை உடையனவும்; ஆடகத் தோற்றத்து - பொன்னைப் போன்ற தோற்றமுடையனவும்; அளவு இலாதன- ஆகிய மாளிகைகள் அளவற்றனவாம்.நாடு அகத் தொழிலின: கருதிச் செய்யப்படும் தொழில் திறம் உடையன என்றும் பொருந்தும். இப்பாடல் விலைமகளிரையும் குறிக்கும் வகையில் சிலேடையாக அமைந்துள்ளது. பாடகம் அணிந்த மகளிரின் பாதங்கள் தாமரை மலரை ஒப்பன; இளையரை (சேடர்). அணைத் திருப்பவர்; சிவந்த வாய் உடையவர்; நடனத் தொழில் அறிந்தவர்; இடுப்பு (நடுவு); பஞ்சின் (தூய்) நுனியை ஒத்தது- என்று தக்கவாறு பொருள்கொள்ள வேண்டும். பாடகம்- கால் அணி; பாடு அகம்- வேலைப்பாடு மிகுந்த. ஒப்பன. தழீஇயின. வாயின. தொழிலின். துய்யன. தோற்றத்த- முற்றெச்செங்கள்.
தழீஇ- தழுவி (சொல்லிசை அளபெடை). 31 |