வான் உறு நிவந்தன - (அந்நகரத்து மாளிகைகள்) வானமளவும் உயரந்து இருப்பவை; வரம்பு இல்செல்வத்த- அளவற்ற செல்வத்தை உடையன; தான் உயர் புகழ்என- எங்கும் பரவியுயர்ந்த புகழ் என்னும்படி; தயங்குசோதிய- விளங்கும் ஒளி உடையன; ஊனம் இல் அற நெறிஉற்ற - குற்ற மற்ற அரநெறியைக் கடைப்பிடித்து வாழும்; கோன்நிகர்- அரசைனைப் போன்று வாழும்; எண்இலாக் குடிகள்தம் கொள்கை சான்றன- எண்ணிக்கை இல்லாத குடிமக்களது தன்மைக்குச் சான்றாக உள்ளனவாம். அந்நகரத்து மக்கள் ஒழுக்கத்தில் சிறந்து- அற நெறியில் நின்று அரசர்களைப் போல வசதியுடன் வாழ்வதற்கு அவர்கள் வாழும் இம்மாளிகைகளே சான்றாக விளங்குகின்றன என்பதாம். “கோன் நிகர்க்குடிகள்” அரசரைப் போல வாழும் குடிமக்கள். சான்றன சான்றாக உள்ளன புகழ் எனத்தயங்கு சோதிய புகழ் பரந்திருப்பது போல ஒளி எங்கும் பரந்திருக்கும் மாளிகைகள் என்பது கருத்து. கொள்கை-தன்மை. 34 |