பக்கம் எண் :

  நகரப் படலம்91

அருவியின்     தாழ்ந்து - (அம்மாளிகைகள்) நீர் அருவி போலத்
தாழ்ந்து;  அலங்கு  முத்து  தாமத்த-  அசையும்  முத்து மாலைகளை
உடையவை;  விரி  முகில் குலம்என- பரந்த மேகக் கூட்டத்தை ஒத்த;
கொடி  வீராயின
-  கொடிகள்  பரவியுள்ளவை; பருமணிக் குவையன-
பெரிய  மணிகளின்  குவியல்களை  உடையன;  பசும்பொன் கோடிய-
பசும்பொன்    குவைகளை   உடையன;   பொரு   மயிற்கணத்தன-
வடிவொத்த மயில்களை உடையன.

‘பொரு    மயில் கணத்தன’ என்பதற்கு உருவ அழகால் ஒத்த மயில்
போன்ற  மகளிர்  கூட்டத்தை    உடையவை என்பதும் பொருத்தமான
பொருளாம்.

மலையும்   போன்றுள்ள:  மலையைப் போலவும் இருப்ப. அருவியும்.
முகிலும்.    மணியும்.     பொன்னும்.   மயிலும்   மலையில்   உள்ள
பொருள்களாகும்.       அருவி    போன்ற    முத்து    மாலைகளும்
பன்மணித்திரள்      பொன்குவயல்-    ஆகியனவும்   மாளிகைகளில்
இருப்பதால்      மலையை   ஒத்திருந்தன   என்கிறார்.   அலங்குதல்:
அசைதல்:  தாமதம்:    மாலை:  பருமணி:  பருத்த  மணிகள்:  கணம்:
கூட்டம்.                                                 35
 
                                         கொடிகளின் காட்சி
 

128.அகில் இடு கொழும் புகை அளாய் மயங்கின.
முகிலொடு வேற்றுமை தெரிகலா. முழுத்
துகிலொடும் நெடுங் கொடிச் சூலம் மின்னுவ;-
பகல் இடு மின் அணிப் பரப்புப் போன்றவே.

 

அகில்   இடு கொழும்  புகை   அளாய்  மயங்கின-  அகிலின்
செழுமையான  புகை  மாளிகை   எங்கும் கலந்தவைகளாய்; முகிலொடு
வேற்றுமை   தெரிகலா
-  மேகத்துடன்  வேற்றுமை  அறிய  முடியாத;
முழுத்துகிலொடு
-  பெரிய   கொடிகளுடன்;   நெடுங்கொடிச்  சூலம்
மின்னுவ
- நீண்ட  கொடி  மரங்களின் நுனியில் நாட்டப்பட்ட சூலங்கள்
ஒளிர்பவை; பகல்  இடு  மின்  அணிப் பரப்புப்போன்ற- ஒளி வீசும்
மின்னல் வரிசையின் பரப்பை ஒத்திருந்தன.

அகிற்     புகையுடன்  கலந்த கொடிகள் மேகத்தை ஒத்தும். அவை
கட்டப்பட்ட   கொடி   மரத்தின்     நுனியில்  பொருந்திய  சூலங்கள்
மின்னுவது  மின்னலை  ஒத்தும்    காணப்பட்டன. தற்குறிப்பேற்றவணி.
மின்   அணி:   மின்னல்   வரிசை.     மாளிகைகளில்   இடிதாங்கும்
பொருட்டும் அழகுக்காகவும் சூலம் பொருத்துவர் ஒப்பு:   திருச்சிற். 222
                                                      36
 

129.துடி இடைப் பணை முலைத் தோகை அன்னவர்
அடி இணைச் சிலம்பு பூண்டு அரற்று மாளிகைக்
கொடியிடை தரள வெண் கோவை சூழ்வன;-
கடியுடைக் கற்பகம் கான்ற மாலையே.