நெடுவரை காண்வரு- பெரிய மலைகளில் காணப்படும்; கதலிக் கானம் போல்- வாழை மரங்களை உடைய தோப்பைப் போல; தாள் நிமிர் பதாகையின் குழாம் தழைத்தன- கொடிமரங்கள் நீண்ட கொடிகளின் தொகுதி மிகுந்துள்ளன;; சேண்மதி வாள்நனி மழுங்கிட மடங்கி- வானத்திலுள்ள சந்திரன் தன் ஒளிமிக மழுங்கி வளைந்து; வைகலும் தேய்வது- நாள்தோறும் தேய்ந்து போவது; அக்கொடிகள் தேய்க்கவே- அந்த கொடிகள் உராய்வதன் காரணமாகத் தான். நகரத்துக் கொடிகள் பெரிய மலைகளில் காணப்படும் வாழை தோப்பை போலக் காணப்படும்; வானத்தில் உள்ள சந்திரன் ஒளி குறைந்து வளைந்து நாள்தோறும் தேய்ந்து காணப்படுவது அக்கொடிகள் சந்திரனுன் மீது உராய்வதனாலேயே என்றார். சந்திரன் தேய்பிறையில் தேய்வதற்குக் காரணம் கற்பித்துக் கூறியதால் இது ஏதுத் தற்குறிப்பேற்ற அணி. 38 மாட மாளிகைகளின் ஒளியும் மணமும் |