பக்கம் எண் :

  நகரப் படலம்93

மன்றுகள் அல்லன - பலர்  கூடுமிடமாகக்  கட்டிய பொது மன்றங்கள்
அல்லாதவை;    மாடம்   மாளிகை-   மேன்மாடியோடு   அமைந்த
மாளிகைகளாம்;  குன்றுகள்  அல்லன- செய்  குன்றுகள் அல்லாதவை;
மணி   செய்   குட்டிமம்
-   இரத்தினங்களைக்  கொண்டு  அமைத்த
முற்றங்களாம்;   முன்றில்கள்   அல்லன-  முற்றங்கள்  அல்லாதவை;
முத்தின் பந்தரே
- முத்துப் பந்தல்களேயாகும்.

அந்நகரத்தில்      பொன்   மண்டபங்களும்.  மலர்மண்டபங்களும்
பொதுமன்றங்களும்.  செய் குன்றுகளும்.  மணி  மேடைகளும்.  முத்துப்
பந்தல்களும்   எங்கும்   காணப்பட்டன;   வெற்றிடங்களே    இல்லை
என்கிறார்.  இது  முதல்  நான்கு  பாடல்களில்  மாட   மாளிகைகளின்
ஒளியும்  மீண்டும்  கூறப்படுகிறது. குட்டிமம்:  முன்றில்கள்   (தளவரிசை
செய்த  தரை).  மன்று: பொது மன்றங்கள். மாடம்:  உப்பரிகை.  குன்று:
செய்குன்று (கட்டு மலை எனவும் கூறுவர்).                    39
 
 

132.மின் என. விளக்கு என. வெயிற் பிழம்பு என.
துன்னிய தமனியத் தொழில் தழைத்த அக்
கன்னி நல் நகர் நிழல் கதுவலால் அரோ.
பொன்னுலகு ஆயது. அப் புலவர் வானமே!

 

துன்னிய  தமனியத்   தொழில்  தழைத்த- உயர்ந்த பொன்னால்
தொழில்  திறம்  அமைய  கட்டப்பட்ட;  அக்கன்னி  நல்நகர்- அந்த
அழிவில்லாத  மா  நகரின்;  மின்என  விளக்கு  என-   மின்னலைப்
போலவும்.  விளக்கின்  ஒளியினைப் போலவும்; வெயில் பிழம்பு என-
சூரியக்  கதிர்களைப்  போலவும்  உள்ள; நிழல் கதுவலால்- ஒளி தன்
மீது  படுவதனால்; அப்புலவர் வானம் பொன் உலகு ஆயது- அந்தத்
தேவருலகு பொன் உலகாயிற்று.

அமரர்     உலகம்    பொன்னுலகமாய்   பொலிவதற்குக் காரணம்
அயோத்தி  மாநகர்  பொன்னால்  அமைந்து.    தீப  ஒளி. சூரியனின்
கதிர்கள்  ஆகியவை  போல  ஒளிர்வதால்   அப்பேரொளியால்  தேவ
உலகு பொன்னுலகாயிற்று என்றதால் ஏதுத்தற்  குறிப்பேற்றவணி. அரோ
ஏ : அசைகள்.                                            40
 

133.எழும் இடத்து அகன்று. இடை ஒன்றி. எல் படு
பொழுதிடைப் போதலின். புரிசைப் பொன் நகர்.
அழல் மணி திருத்திய அயோத்தியாளுடைய
நிழல் எனப் பொலியுமால்- நேமி வான் சுடர்.
 

நேமி     வான்சுடர் - வட்ட வடிவமாக வானில் ஒளிரும் சூரியன்;
எழும்   இடத்து   அகன்று
-   உதிக்கின்ற  காலத்திலே  கிரணங்கள்
விரிந்தும்;  இடை ஒன்றி- நடுப்பகலில் மிக்கும்; எல்படுபொழுது இடை
போதலின்
-  மாலையில்    மறையும்  காலத்திலே மீண்டும் கிரணங்கள்
மறைந்தும் போவது; அழல் மணி திருத்திய- தீயைப் போல