பக்கம் எண் :

228பால காண்டம்  

அழி:     பகுதித்      தொழிற்பெயர்.     தொங்கல்:    மாலை
(தொங்குமாறணிவது).  மோலி:  மகுடம்  (இங்குச் சடைமுடி). ‘’விழிபட
வெந்ததோ?   வேறுதானுண்டோ?’’   என்றது   ஐயவணி.   பழிபடா:
பழிக்காளாகாத.  அறிஞ:  அண்மைவிளி. ஊங்கு: முன்புள்ள இடத்தை
உணர்த்தும்.  ‘உப்பக்கம்’  என்பர் வள்ளுவர். அது போன்றது  என்க.
‘விழிஎனக்  கூறினும்  இங்கு  நெற்றிக்கண்ணை  உணர்த்தும். தீக்கண்
அதுதானே!                                               20
 

359.
 

என்றலும். இராமனை நோக்கி.
   ‘இன் உயிர்
கொன்று உழல் வாழ்க்கையள்.
   கூற்றின் தோற்றத்தள்.
அன்றியும் ஐ-இருநூறு
   மையல் மா
ஒன்றிய வலியினள்.
   உறுதி கேள்’ எனா.

 

என்றலும்   இராமனை நோக்கி- என்று சொன்னதும்.  இராமனைப்
பார்த்து  (விசுவாமித்திரன்); இன்உயிர் கொன்று உழல்வாழ்க்கையள் -
இனிய     உயிர்களை     எல்லாம்   கொன்று   திரியும்   வாழ்க்கை
உடையவளும்;   கூற்றின் தோற்றத்தள் - எமனைப் போன்ற தோற்றம்
உடையவளும்;  அன்றியும்   ஐ   இருநூறுமையல்மா   -  ஆயிரம்
மதயானைகளுக்கு   ஒப்பான.;  ஒன்றிய  வலியினள்  -  பொருந்திய
வலிமை உடையவளுமான; உறுதி கேள் எனா - (ஒருத்தி) செய்தியைக்
கேட்பாயாக என்று. 

இன்னுயிர்:  இனிய உயிர். அவராவார்: முனிவர் முதலானோர். உழல்
வாழ்க்கை  வினைத்தொகை   (திரிகின்ற   வாழ்க்கை).   கூற்று:  எமன்.
தோற்றத்தள்:  தோற்றம் உடையவள்.  ஐ  இரு நூறு: ஆயிரம்.  மையல்:
வலிமை.  மா: மிருகம் (யானை). ஒன்றிய:  பொருந்திய.  உறுதி:  செயல்.
எனா:  என்று  செயா  என்ற   வாய்பாட்டு   வினையெச்சம். இதுமுதல்
ஏழுபாடல்கள்    தாடகையின்   வரலாறு    கூறுவனவாம்.   ‘பழிபடா
மன்னவன்   பரித்த   நாட்டின்  ஊங்கு   அழிவதென்   எனக்கேட்ட
இராமனுக்கு    அழிவுக்குக்    காரணமான   தாடகையைப்    பற்றிக்
கூறுவனவாம்.                                             21
 

360.

‘மண் உருத்து எடுப்பினும்.
   கடலை வாரினும்.
விண் உருத்து இடிப்பினும்.
   வேண்டின். செயகிற்பாள்;
எண் உருத் தெரிவு அரும்
   பாவம் ஈண்டி. ஓர்
பெண் உருக் கொண்டெனத்
   திரியும் பெற்றியாள்;