பக்கம் எண் :

  தாடகை வதைப் படலம்231


 

அலங்கல் முகிலே! - அவள்
   இ(வ்) அங்க நிலம் எங்கும்
குலங்களொடு அடங்க நனி கொன்று
   திரிகின்றாள்;
 

இலங்கை  அரசன்  பணி  அமைந்து-   இலங்கை   வேந்தனான
இராவணனுடைய  கட்டளையை மேற்கொண்டு; விலங்கல் வலிகொண்டு
-  மிருக  பலம்  கொண்டவளாய்  (எனக்கு); ஓர் இடையூறாய் - ஒரே
இடையூறாக  இருந்து  கொண்டு;  எனது  வேள்வி  நலிகின்றாள்  -
(அரக்கர்கள்)      எனது       வேள்வியை      (நிறைவேறவிடாமல்)
துன்புறுத்துகின்றாள்;  அலங்கல்  முகிலே  -  மாலையணிந்த  மேகம்
போன்றவனே!; அவள்  இவ்வங்க நிலம் எங்கும் - அவ்வரக்கி. இந்த
அங்க  நாட்டில்  வாழ்பவர்களை  எல்லாம்;  குலங்களொடு அடங்க -
அவர்களது குலத்தோடு முழுதும்; நனிகொன்று திரிகின்றாள் - மிகவும்
அழித்துக்  கொன்று  திரிந்து  கொண்டிருக்கிறாள்;  பணி -  கட்டளை
(வேலையுமாம்).

பணி:  கட்டளை (வேலையுமாம்). வலி: மிருகபலம்  (மூர்க்கத்தனமான
வலிமை). நலிதல்: வருத்துல் அலங்கல்: மாலை. முகில்: மேகம்.   இந்தப்
பகுதியெல்லாம்:  அங்கநாடு.  இங்கு  வாழ்பவர்களை   எல்லாம்  இந்த
அரக்கி   குலத்தோடு   கொன்று   தின்று  திரிகிறாள்.   இராவணனது
கட்டளைப்படி  அரக்கர்கள்  எனது   வேள்விக்கு   இடையூறு  செய்து
துன்புறுத்துகின்றனர் என்றான். முனிவன் என்பது கருத்து.          26
 

365.
 

‘முன் உலகு அளித்து முறை நின்ற உயிர் எல்லாம்
தன் உணவு எனக் கருது தன்மையினள்; மைந்த!
என் இனி உணர்த்துவது? இனிச் சிறிது நாளில்
மன்னுயிர் அனைத்தையும் வயிற்றின் இடும்’ என்றான்
 

முன்   உலகளித்து  - முற்பட உலகத்துயிர்களை யெல்லாம் காத்து;
முறை நின்ற  உயிரெல்லாம்
- (அவ்வாறு காக்கப்பட்டதால்) முறையே
நிலைத்து  நின்ற  உயிர்களை  எல்லாம்;  தன்  உணவு எனக்கருது -
தனது  உணவு பொருள் போலவே என்னும்; ?தன்மையவள் மைந்தா -
தன்மையுடையவள்.  தயரதனது மைந்தனே!; என் இனி உணர்த்துவது -
இனிச்   சொல்லவேண்டியதென்ன  உண்டு;  இனிச்சிறிது  நாளில்  -
இன்னும்  சில  நாட்களி்லே; மன்னுயிர் அனைத்தையும் - நிலைபெற்ற
உயிர்களை  எல்லாம்;  வயிற்றின்  இடும்  என்றான்  -  வயிற்றிலே
போட்டுக்கொள்வாள் என்றான்.

தயரதன்.   மன்னுயிர்.   தன்னுயிர்  எனக்கருதுபவன்.  தாடகையோ
மன்னுயிர்  கொன்று  திரிபவள்  எனத்   தாடகையின்  கொடுமையைத்
தயரதனுடைய  பெருமையைக்   கூறியுணர்த்துவதாக   அமைந்திருப்பது
சிறப்பு.

உலகளித்தல்: பரிபாலித்தல் மன்: பெருமை.                   27