பக்கம் எண் :

234பால காண்டம்  

   
 

மறைக் கடை அரக்கி. வடவைக் கனல்
   இரண்டு ஆய்
நிறைக் கடல் முளைத்தென.
   நெருப்பு எழ விழித்தாள்.
 

இறை.  கடைதுடித்த புருவத்தள்- சிறிது  கடைப்பாகம்  துடிக்கின்ற
புருவத்தை  உடையவளும்; எயிறு  என்னும் பிறை கடை பிறக்கிட -
பற்கள்   என்னும்   சந்திரப்   பிறைகள் கடைப்பகுதி விளக்கமுறும்படி;
மடித்த  பிலவாயள்  
-  மடித்துக்  கொண்ட.  குகை போன்ற  வாயை
உடையவளுமான;  மறைக்  கடை  அரக்கி  - மறை நெறியின் வரம்பு
கடந்த  அரக்கியான  அந்தத்  தாடகை; வடவைக்கனல் இரண்டாய் -
வடவைத் தீ  இரண்டு  கூறாகி;  நிறைக்கடல்  முளைத்தென  -  நீர்
நிறைந்த   கடலில்  முளைத்தது என்று கூறும்படி வந்து; நெருப்பு எழ
விழித்தாள்
- கண்களில் நெருப்பு எழும்படி விழித்துப் பார்த்தாள்.

பிறக்கிட:  பிறவினை.  எயிறு:  பற்கள்.  மறை   நெறி   கடந்தவள்
என்பதால்  ‘மறைக்  கடையரக்கி’ என்றார். ‘நிறைக்கடல்’   தாடகையின்
உடலுக்கும்.   ‘வடவைக்  கனல்  இரண்டு’.  அவளது    கண்களுக்கும்
உவமையாயின.   சினத்தால்   புருவங்களின்   கடைதுடிக்க.    பற்கள்
என்னும்   பிறைமதி   பிறங்க.   மடித்த   குகை   போன்ற   வாயை
உடையவளாய்   -   வடவைத்தீ  இருகூறாகிக்  கடலில்   தோன்றியது
போன்ற  கண்களை  உடையவளாய்  நெருப்பெழ  விழித்தாள்  என்பது
பொருள். இல்பொருள் உவமை (வடவைக் கடல் இரண்டு).          31
 

370.
 

கடம் கலுழ் தடங் களிறு
   கையொடு கை தெற்றா.
வடம் கொள. நுடங்கும் இடையாள்.
   மறுகி வானோர்
இடங்களும். நெடுந் திசையும்.
   ஏழ் உலகும். யாவும்.
அடங்கலும் நடுங்க. உரும் அஞ்ச.
   நனி ஆர்த்தாள்
 

கடம்  கலுழ் தடங்களிறு- மதம் பொழிகின்ற பெரிய  யானைகளை;
கையொடு  கை  தெற்றா  
-  ஒன்றன் துதிக்கை யோடு. மற்றொன்றன்
துதிக்  கையை முடித்து; வடம் கொள - மாலையாக அணிந்து கொண்டு
இருப்பதால்;   நுடங்கும்   இடையாள்   -   அசைகின்ற  இடையை
உடையவளான  அந்த  அரக்கி; வானோர் இடங்களும் - விண்ணோர்
வாழும் இடங்களும்;  நெடும்திசையும் ஏழுலகும் - நெடிய திசைகளும்.
ஏழு  உலகங்களும்; யாவும் அடங்கலும் நடுங்க - ஆகிய அனைத்தும்
மற்றும்  உயிர்கள்   முழுதும்  மயங்கி  நடுங்கவும்;  உரும் அஞ்சநனி
ஆர்த்தாள்
- இடியும் அஞ்சவும் மிகவும் ஆர்ப்பரித்தாள்.