பக்கம் எண் :

  தாடகை வதைப் படலம்243

முன்பு   ‘’நாற்றம்  கேட்டலும்  தின்ன  நயப்பதோர்  கூற்றுண்டே’’
எனக்  கூறியதற்  கேற்ப.  இங்குப்  ‘’புதிய   கூற்றனையாள்’’ என்றார்.
முன்பு   ‘’செங்கைச்   சூல   வெந்தீ’’    என்றதற்கேற்ப  ‘’மூவிலைக்
காலவெந்தீ’’  என்றார்.  கதிர்: ஒளிக்கற்றை.  விதி: கட்டளை.  உவாமதி:
முழுமதி.  ‘கோள்’  எனப்  பொதுவாகக்   கூறினாலும்  ராகு  என்னும்
கோளே   மதியைப்  பிடிப்பாதலின்  இங்கு   ‘ராகு’  என்று  பொருள்
கூறப்பட்டது. காலம்: உயிர்களுக்கு இறுதிசெய்யும் காலமாம்.        47
 

386.மாலும். அக் கணம் வாளியைத் தொட்டதும்.
கோல வில் கால் குனித்ததும். கண்டிலர்; 
காலனைப் பறித்து அக் கடியாள் விட்ட
சூலம் அற்றன துண்டங்கள் கண்டனர்.

 

மாலும்   அக்கணம்  வாளியைத்  தொட்டதும்  -   திருமாலின்
அவதாரமான   ராமபிரான்   அக்கணமே   அம்பைத்   தொடுத்ததும்;
கோல  வில்   கால்   குனித்ததும்   
-  அழகிய  தனது  வில்லின்
நுனியை     வளைத்ததும்    ஆகிய    செயல்களை;  கண்டிலர்  -
விண்ணகத்துத்   தேவரும்   மண்ணில்  நின்ற முனிவரும் கண்டாரிலர்;
காலனைப்   பறித்து   அக்கடியாள்   விட்ட  
-  யமனை  அவன்
இடத்திலிருந்து  பறித்துச்  சூலவடிவாக்கி   அக்கொடிய  அரக்கி   வீச
அந்த;    சூலம்   அற்றன   துண்டங்கள்   கண்டனர்  -  சூலம்
சிதைந்துபோய்ப் பலதுண்டங்களாக வீழ்ந்ததைப் பார்த்தனர்.

மால்:   அழகு. இங்குத் திருமாலின் அம்சமான ராமனைச் சுட்டியது.
வாளி.  அம்பு.  தொட்டது:  தொடுத்தது.  கோலம்:  அழகு.  வில்கால்:
வில்லின்  முனை.  குனித்தல்:  வளைத்தல். காலன்: எமன்.   பறித்தல்:
எடுத்தல்.  கடியாள்: கடுமை உடையவள். அற்றன:  வினையாலணையும்
பெயர்.    பகுதி    இரட்டித்துக்    காலம்   காட்டியது.    துண்டம்:
துண்டிக்கப்பட்ட   சிறுபகுதி.   தாடகை   ஏவிய   சூலத்தை  ராமன்
அழித்தமை கூறப்பட்டது.                                   48
 

387.அல்லின் மாரி அனைய நிறத்தவள்.
சொல்லும் மாத்திரையின். கடல் தூர்ப்பது ஓர்
கல்லின் மாரியைக் கைவகுத்தாள்; அது
வில்லின் மாரியின். வீரன் விலக்கினான்.

 

அல்லின்  மாரி அனைய நிறத்தவள்-  இருட்டில் பெய்யும்  மழை
போன்ற  கரிய  நிறம்  கொண்ட தாடகை; சொல்லும் மாத்திரையின் -
ஒரு   சொல்  சொல்லும்  கால  அளவிலேயே;  கடல்  தூர்ப்பதோர்
கல்லின்   மாரியே  
-  கடலையும் தூர்த்துவிடக் கூடியதான  கற்களை
மலைபோல;   கைவகுத்தாள்  -   கைகளால் எடுத்து வீசினாள்; அது
வில்லின்   மாரியின்   வீரன்  விலக்கினான்  
-  அதனை.  தனது
வில்லிலிருந்து   பொழியும்  அம்பு   மழையினால்   வீரனாகிய  ராமன்
விலக்கலானான்.