பக்கம் எண் :

  தாடகை வதைப் படலம்245

கல் நெடு மாரி பெய்யக்
   கடையுகத்து எழுந்த மேகம்.
மின்னொடும் அசனியோடும்
   வீழ்வதே போல - வீழ்ந்தாள்.

 

பொன்  நெடும் குன்றம் அன்னான்  -  நீண்டு.  உயர்ந்த பொன்
மலையாகிய   மேருமலையைப்   போன்ற  சலியாத்  தன்மை  வாய்ந்த
இராமபிரானது;    புகர்முகப்   பகழி    என்னும்    -   முன்புறம்
புள்ளிகளையுடைய  அம்பு  என்ற;  அ  நெடும்  கால வன் காற்று -
நெடிய.  கடையூழிக்   காலத்து  வலியகாற்று;  அடித்தலும்  - அடித்த
உடனே; இடித்து  வானில்  கல்நெடுமாரி  பெய்ய  - வானத்தே இடி
முழக்கம் செய்து கல்மழை பெய்வதற்காக; கடையுகத்து எழுந்த மேகம்
-   யுகத்தின்   கடைசியில்   எழுந்த   மேகமானது;   மின்   ஓடும்
அசனியோடும்  
-  மின்னலோடும்.  இடியோடும்  வீழ்வதே  போல
வீழ்ந்தாள்
- வீழ்வது போல. தாடகை வீழ்ந்தாள்.

கரிய   நிறத்தினனான  ராமனைப் ‘பொன் நெடுங்குன்றம்’ என்றது
நிறம்  கருதியன்று.  சலியாத்தன்மை   கருதியே  யாகும். புகர்: புள்ளி.
முகம்:  முன்புறம்  பகழி: அம்பு. கடையுகம்:   யுகக்கடை. சொல்மாற்று.
மேகம்: புயல். தாடகைக்கு மேகம் உவமை.  அவளது கூந்தலும் குரலும்
மின்னலும்  இடியும்  போன்றவை  என்க.   இராமபிரானது அம்பாகிய
கால  வன்  காற்று  அடித்ததும்.  இடி.   மின்னலோடு  கூடிய ஊழிக்
காலத்து மேகம் வீழ்வது போல. தாடகை வீழ்ந்தாள் என்க         51
 

390.பொடியுடைக் கானம் எங்கும்
   குருதிநீர் பொங்க வீழ்ந்த
தடியுடை எயிற்றுப் பேழ் வாய்த்
   தாடகை. தலைகள்தோறும்
முடியுடை அரக்கற்கு. அந் நாள்.
   முந்தி உற்பாதம் ஆக.
படியிடை அற்று வீழ்ந்த
   வெற்றிஅம் பதாகை ஒத்தாள்.

 

பொடி   உடைக்  கானம்  எங்கும்-  புழுதி  நிறைந்த   அந்தக்
காடெல்லாம்;  குருதிநீர்   பொங்க  வீழ்ந்த  -  இரத்தம்  நிறைந்து
பொங்கும்படி  வீழ்ந்த; தடிஉடை  எயிற்றுப்  பேழ்வாய்த் தாடகை -
தடித்த  உடலும்   கோரைப்  பற்களும் குகை போன்ற வாயும் கொண்ட
தாடகை என்னும் அவ்வரக்கி; தலைகள் தோறும் முடியுடை அரக்கற்கு
- தலைகள் தோறும் மணிமுடியை  உடைய  பத்துத் தலைகளை உடைய
அரக்கனாகிய  இராவணனுக்கு;  முந்தி  உற்பாதம்  ஆக - பின்னால்
அழிவதற்கு முந்திய கேடுகால அறிகுறியாக; அந்நாள் படியிடை இற்று