பக்கம் எண் :

246பால காண்டம்  

வீழ்ந்து  அந்த  நாளில்  பூமியில்  ஒடிந்து  வீழ்ந்த;  வெற்றி  அம்
பதாகை ஒத்தாள்
- வெற்றிக் கொடியை ஒத்திருந்தாள்.

பொடி:    புழுதி. கானம்: காடு. குருதிநீர்: இரத்தம். தடியுடை எயிறு;
பற்களிடையே    புலால்   துண்டுகள்   சிக்கியிருக்கும்.    பேழ்வாய்:
திறந்தவாய்.  உற்பாதம்:  கெடுங்கால  அறிகுறி.  அழிவுக்   காலத்தின்
முன்அறிகுறி.   தடித்த   உடலை   உடைய   தாடகை  வீழ்ந்தது  -
இராவணனது   வெற்றிக்   கொடி  ஒடிந்து  வீழ்ந்ததை   ஒத்திருந்தது
என்பது கருத்து. இது தற்குறிப்பேற்ற அணி.                     52
 

391.கான் திரிந்து ஆழி ஆகத்
   தாடகை கடின மார்பத்து
ஊன்றிய பகழி வாயூடு
   ஒழுகிய குருதி வெள்ளம்
ஆன்ற அக் கானம் எல்லாம்
   ஆயினது - அந்த மாலைத்
தோன்றிய செக்கர் வானம் தொடக்கு
   அற்று வீழ்ந்தது ஒத்தே!
 

தாடகை  கடின  மார்பத்து  ஊன்றிய பகழி- அந்த  அரக்கியின்
உறுதி   வாய்ந்த  மார்பில் சென்று ஊன்றிய அம்பாலுண்டான; வாயூடு
ஒழுகிய  குருதிவெள்ளம்  
- புண்ணிலிருந்து ஒழுகிய ரத்தப் பெருக்கு;
கான்  திரிந்து  ஆழி  ஆக  
-  அந்தக்  காடே மாறி. கடலாகும்படி;
ஆன்று   அக்கானம்  எல்லாம்
-  நிறைந்த  அந்தக்  காடெல்லாம்;
அந்திமாலை தோன்றிய செக்கர்வானம்
- அந்திமாலையில் தோன்றிய
சிவந்த வானம்; தொடக்கு  அற்று  வீழ்ந்தது  ஒத்த  ஆயினது  -
வானத்தின்   சம்பந்தம்    நீங்கிக்   கீழே  வீழ்ந்து  கிடந்ததைப்போல்
ஆய்விட்டது.

கான்:  காடு. ஆழி: கடல். பகழிவாய்: அம்புபட்டுப்பிளந்த புண்வாய்.
வெள்ளம்:  பெருக்கு.  ஆன்று: நிறைந்த. செக்கர்வானம்:   செவ்வானம்.
இராமபிரானது   அம்புபட்ட   புண்வாயிலிருந்து   பெருகிய    ரத்தம்
வெள்ளமாய்ப்   பெருகி   -  அந்தக்   காட்டைக்   கடலாக்கிவிட்டது.
அந்திமாலையின்  சிவந்த  வானம்  -  வானத்தின்   தொடர்பு  நீங்கி.
கீழேவிழுந்து  கிடப்பதைப் போல அந்தக்காடு  காணப்பட்டது  என்பது
கருத்து.                                                  53
 

392.வாச நாள்மலரோன் அன்ன
   மாமுனி பணி மறாத.
காசு உலாம் கனகப் பைம் பூண்.
   காகுத்தன் கன்னிப்போரில்.
கூசி. வாள் அரக்கர்தங்கள்
   குலத்து உயிர் குடிக்க அஞ்சி.
ஆசையால் உழலும் கூற்றும்.
   சுவை சிறிது அறிந்தது அன்றே.