“நெடியோன்
குன்றமும், தொடியோள் பௌவமும்,
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு,
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்,
கலி கெழு வஞ்சி்யும், ஒலி புனல் புகாரும்,
அரைசு வீற்றிருந்த, உரைசால் சிறப்பின்,
மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய
இன் இளவேனில் வந்தது இவண்’’ என,
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த
இளங்கால்-தூதன் இசைத்தனன். ஆதலின்,
மகர வெல் கொடி மைந்தன் சேனை!
புகர் அறு கோலம் கொள்ளும்’ என்பது போல்,
கொடி மிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணி மொழி கூற-
"மாதவி நிலா-முற்றத்தில் தனியளாய் அமர்ந்து மதுர கீதம் பாடுதல்"
15
20
25
மடல்
அவிழ் கானல் கடல் விளையாட்டினுள்
கோவலன் ஊட, கூடாது ஏகிய,
மா மலர் நெடுங் கண் மாதவி விரும்பி;
வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில்-பள்ளி ஏறி; மாண்- இழை,
தென் கடல் முத்தும், தென் மலைச் சந்தும்,
தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்,
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து,
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி,
அதிரா மரபின் யாழ் கை வாங்கி,
மதுர கீதம் பாடினள், மயங்கி-
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி:
"மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து,
வசந்தமாலையிடம் கொடுத்து அனுப்புதல்"
45
50
55
60
65
70
சண்பகம், மாதவி,
தமாலம், கருமுகை,
வெண் பூ மல்லிகை, வேரொடு மிடைந்த
அம் செங்கழுநீர், ஆய் இதழ்க் கத்திகை
எதிர் பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர் பூந்தாழை முடங்கல் வெண் தோட்டு-
விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட
ஒரு தனிச் செங்கோல் ஒரு மகன் ஆணையின்,
ஒரு முகம் அன்றி, உலகு தொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி-
அலத்தகக் கொழுஞ் சேறு அளைஇ, அயலது
பித்திகைக் கொழு முகை ஆணி கைக்கொண்டு,
‘மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும்
இன் இளவேனில் இளவரசாளன்;
அந்திப் போதகத்து அரும் பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும்,
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்,
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல்
இறும்பூது அன்று; அஃது அறிந்தீமின்’ என,
எண்-எண் கலையும் இசைந்து உடன் போக,
பண்ணும் திறனும் புறங்கூறு நாவில்
தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்து உரை எழுதி;
பசந்த மேனியள் படர் உறு மாலையின்,
வசந்தமாலையை, ‘வருக’ எனக் கூஉய்,
‘தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம்
கோவலற்கு அளித்து, கொணர்க ஈங்கு’ என-
திலகமும்,
அளகமும், சிறு கருஞ் சிலையும்,
குவளையும், குமிழும், கொவ்வையும், கொண்ட
மாதர் வாள்முகத்து, மதைஇய நோக்கமொடு,
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்;
புயல் சுமந்து வருந்தி, பொழி கதிர் மதியத்து,
கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்,
பாகு பொதி பவளம் திறந்து, நிலா உதவிய
நாகு இள முத்தின் நகைநலம் காட்டி,
“வருக” என, வந்து “போக” எனப் போகிய
கரு நெடுங் கண்ணி காண் வரிக் கோலமும்;
அந்தி-மாலை வந்ததற்கு இரங்கி,
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி,
கிளி புரை கிளவியும், மட அன நடையும்,
களி மயில் சாயலும், கரந்தனள் ஆகி,
செரு வேல் நெடுங் கண் சிலதியர் கோலத்து
ஒரு தனி வந்த உள் வரி ஆடலும்;
சிலம்பு வாய் புலம்பவும், மேகலை ஆர்ப்பவும்,
கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும்,
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும்;
கோதையும், குழலும், தாது சேர் அளகமும்,
ஒரு காழ் முத்தமும், திரு முலைத் தடமும்,
மின் இடை வருத்த நல்-நுதல் தோன்றி,
சிறுகுறுந் தொழிலியர் மறு மொழி உய்ப்ப,
புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின்
இரு புற மொழிப் பொருள் கேட்டனள் ஆகி,
தளர்ந்த சாயல், தகை மென் கூந்தல்
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரிக் கோலமும்;
பிரிந்து உறை காலத்து, பரிந்தனள் ஆகி,
என் உறு கிளைகட்குத் தன் உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி; அன்றியும்,
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி,
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்;
அடுத்துஅடுத்து, அவர் முன் மயங்கிய மயக்கம்
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்;
ஆடல் மகளே ஆதலின், ஆய்-இழை!
பாடு பெற்றன அப் பைந்தொடி-தனக்கு’ என-