மாலதி இறந்த மகவைக் கொண்டு தெய்வக் கோட்டங்களுக்குச் சென்று,வரம் வேண்டுதல்"
5
10
மேல் ஓர் நாள்
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க,
பால் விக்கி, பாலகன்-தான் சோர, மாலதியும்,
‘பார்ப்பானொடு மனையாள் என்மேல் படாதன விட்டு
ஏற்பன கூறார்’ என்று ஏங்கி, மகக் கொண்டு,
அமரர் தருக் கோட்டம், வெள்யானைக் கோட்டம்,
புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம், பகல் வாயில்
உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க் கோட்டம், வேல்கோட்டம்,
வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம்,
நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம், புக்கு எங்கும்
‘தேவிர்காள்! எம் உறு நோய் தீர்ம்’ என்று மேவி-
"சாத்தன் கோயிலில் மாலதி பாடுகிடக்க, இடாகினிப்பேய்
அவள் கையிலிருந்த பிணத்தைப் பிடுங்கித் தின்னுதல்"
15
20
ஓர் பாசண்டச்
சாத்தற்குப் பாடுகிடந்தாளுக்கு,
ஏசும் படி ஓர் இளங்கொடி ஆய், ‘ஆசு இலாய்!
செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;
பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையில்
படு பிணம் தா’ என்று, பறித்து, அவள் கைக் கொண்டு,
சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்கு
இடு பிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி,
மடிஅகத்து இட்டாள், மகவை-
"தேவந்தியின் வரலாறு சாத்தன் கலை பல பயின்று;
தேவந்தியுடன் எட்டு யாண்டு இல்லறம் புரிந்து நீங்குதல்"
30
35
மறையோன் பின் மாணி
ஆய், வான் பொருள் கேள்வித்
துறைபோய், அவர் முடிந்தபின்னர், இறையோனும்
தாயத்தாரோடும் வழக்கு உரைத்து, தந்தைக்கும்
தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து, மேய நாள்,
தேவந்தி என்பாள் மனைவி, அவளுக்கு,
‘பூ வந்த உண் கண் பொறுக்க’ என்று மேவி, தன்
மூவா இள நலம் காட்டி, ‘எம் கோட்டத்து
நீ வா’ என உரைத்து, நீங்குதலும்-
தூ-மொழி,
ஆர்த்த கணவன் அகன்றனன், “போய் எங்கும்
தீர்த்தத் துறை படிவேன்” என்று; அவனைப் போர்த்து இங்ஙன்
மீட்டுத் தருவாய்’ என ஒன்றன்மேல் இட்டு,
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்,
"தேவந்தி கண்ணகியிடம் சென்று ஆசி கூறுதல்"
40
வாட்டு-அரும் சீர்க்
கண்ணகி-நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இனையளாய் நண்ணி;
அறுகு, சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;
‘பெறுக, கணவனோடு!’ என்றாள்-
‘பெறுகேன்; கடுக்கும்
என் நெஞ்சம்; கனாவினால், என் கை
பிடித்தனன் போய் ஓர் பெரும் பதியுள் பட்டேம்;
பட்ட பதியில், படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார், இடுதேள் இட்டு, என்-தன்மேல்;
“கோவலற்கு உற்றது ஓர் தீங்கு” என்று அது கேட்டு,
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்; காவலனொடு
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்; உரையாடேன்;
தீக் குற்றம் போலும், செறி-தொடீஇ! தீக் குற்றம்
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற
நல் திறம் கேட்கின் நகை ஆகும்’-
பொன்-தொடீஇ!
கைத்தாயும் அல்லை; கணவற்கு ஒரு நோன்பு
பொய்த்தாய் பழம் பிறப்பில்; போய்க் கெடுக! உய்த்துக்
கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்,
மடல் அவிழ் நெய்தல் அம் கானல், தடம் உள,
சோம குண்டம், சூரிய குண்டம், துறை மூழ்கி,
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு
தாம் இன்புறுவர் உலகத்து, தையலார்;
போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்; யாம் ஒரு நாள்
ஆடுதும்’ என்ற அணி-இழைக்கு-அவ் ஆய்-இழையாள்,
"கோவலன் மதுரை சென்று பொருள் ஈட்ட எண்ணியுள்ள தனது கருத்தை வெளியிட்டு,
விடியுமுன் கண்ணகியுடன் மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லுதல்"
75
‘சேயிழை! கேள்; இச்
சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்த சீர்
மாட மதுரை அகத்துச் சென்று; என்னோடு இங்கு,
ஏடு அலர் கோதாய்! எழுக’ என்று, நீடி
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான்-கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.