"ஐயையின்
கோட்டத்தில் ஒரு பக்கத்திலே கோவலன் முதலிய மூவரும் இளைப்பாறி இருத்தல்"
5
கடுங்
கதிர் திருகலின், நடுங்க அஞர் எய்தி,
ஆறு செல் வருத்தத்துச் சீறடி சிவப்ப
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து-ஆங்கு,
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை
வருந்து நோய் தணிய இருந்தனர். உப்பால்-
"சாலினி ஆவேசம் கொண்டு மறக்குடி மக்களுக்கு அறிவுறுத்தல்"
10
15
வழங்கு
வில் தடக்கை மறக் குடித் தாயத்துப்
பழங் கடன் உற்ற முழங்கு வாய்ச் சாலினி
தெய்வம் உற்று, மெய்ம் மயிர் நிறுத்து,
கை எடுத்து ஓச்சி, கானவர் வியப்ப,
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும்
நடு ஊர் மன்றத்து அடி பெயர்த்து ஆடி,
‘கல் என் பேர் ஊர்க் கண நிரை சிறந்தன;
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன;
மறக் குடித் தாயத்து வழி வளம் சுரவாது,
அறக் குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும்;
கலை அமர் செல்வி கடன் உணின் அல்லது
சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள்;
மட்டு உண் வாழ்க்கை வேண்டுதிர் ஆயின்
கட்டு உண் மாக்கள்! கடம் தரும்’ என-ஆங்கு-
"மறக் குடி மக்கள் குமரி ஒருத்திக்குக் கொற்றவையின் கோலம் புனைவித்து,
வழிபடு பொருள்களுடன் ஐயையின் கோட்டம் செல்லுதல்
"
20
25
இட்டுத்
தலை எண்ணும் எயினர் அல்லது
சுட்டுத் தலைபோகாத் தொல் குடிக் குமரியை-
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி
குறு நெறிக் கூந்தல் நெடு முடி கட்டி,
இளை சூழ் படப்பை இழுக்கிய ஏனத்து
வளை வெண் கோடு பறித்து, மற்று அது
முளை வெண் திங்கள் என்னச் சாத்தி;
இணை மலர்ச்
சீறடி இனைந்தனள் வருந்தி,
கணவனோடு இருந்த மணம் மலி கூந்தலை,
‘இவளோ, கொங்கச் செல்வி; குடமலை ஆட்டி;
தென் தமிழ்ப் பாவை; செய்த தவக் கொழுந்து;
ஒரு மா மணி’ ஆய், உலகிற்கு ஓங்கிய
திரு மா மணி’ எனத் தெய்வம் உற்று உரைப்ப
உட்கு உடைச்
சீறூர் ஒரு மகன் ஆன் நிரை கொள்ள உற்றகாலை
வெட்சி மலர் புனைய, வெள் வாள் உழத்தியும் வேண்டும் போலும்
வெட்சி மலர் புனைய, வெள் வாள் உழத்தியும் வேண்டின், வேற்றூர்க்
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து, காட்டும் போலும்.
கள் விலை
ஆட்டி மறுப்ப, பொறா மறவன் கை வில் ஏந்தி,
புள்ளும் வழிப் படர, புல்லார் நிரை கருதி, போகும் போலும்
புள்ளும் வழிப் படர, புல்லார் நிரை கருதி, போகும்காலை,
கொள்ளும் கொடி எடுத்து, கொற்றவையும் கொடுமரம் முன் செல்லும் போலும்.
இள மா
எயிற்றி! இவை காண், நின் ஐயர்
தலைநாளை வேட்டத்துத் தந்த நல் ஆன் நிரைகள்;
கொல்லன், துடியன், கொளை புணர் சீர் வல்ல
நல் யாழ்ப் பாணர்-தம் முன்றில் நிறைந்தன.
முருந்து ஏர் இள நகை! காணாய், நின் ஐயர்
கரந்தை அலறக் கவர்ந்த இன நிரைகள்;
கள் விலைஆட்டி, நல் வேய் தெரி கானவன்,
புள் வாய்ப்புச் சொன்ன கணி, முன்றில் நிறைந்தன.
கய மலர் உண் கண்ணாய்! காணாய், நின் ஐயர்,
அயல் ஊர் அலற, எறிந்த நல் ஆன் நிரைகள்;
நயன் இல் மொழியின் நரை முது தாடி
எயினர், எயிற்றியர், முன்றில் நிறைந்தன.
சுடரொடு
திரிதரு முனிவரும் அமரரும்
இடர் கெட அருளும் நின் இணை அடி தொழுதேம்;
அடல் வலி எயினர் நின் அடி தொடு கடன் இது
மிடறு உகு குருதி; கொள், விறல் தரு விலையே.
அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு
மணி உருவினை! நின மலர் அடி தொழுதேம்;
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது,
நிணன் உகு குருதி; கொள், நிகர் அடு விலையே.
துடியொடு, சிறு பறை, வயிரொடு துவைசெய,
வெடி பட வருபவர் எயினர்கள் அரை இருள்;
அடு புலி அனையவர், குமரி! நின் அடி தொடு
படு கடன் இது, உகு பலி முக மடையே.
வம்பலர்
பல்கி, வழியும் வளம் பட;
அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய்-
சங்கரி, அந்தரி, நீலி, சடாமுடிச்
செங் கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்!
துண் என் துடியொடு துஞ்சு ஊர் எறிதரு,
கண் இல் எயினர் இடு கடன் உண்குவாய்-
விண்ணோர் அமுது உண்டும் சாவ, ஒருவரும்
உண்ணாத நஞ்சு உண்டு, இருந்து, அருள் செய்குவாய்!
பொருள் கொண்டு புண் செயின் அல்லதை, யார்க்கும்
அருள் இல் எயினர் இடு கடன் உண்குவாய்-
மருதின் நடந்து, நின் மாமன் செய் வஞ்ச
உருளும் சகடம் உதைத்து, அருள் செய்குவாய்!