எனக்
கேட்டு, பொங்கி எழுந்தாள்; விழுந்தாள், பொழி கதிர்த்
திங்கள் முகிலோடும் சேண் நிலம் கொண்டென;
செங் கண் சிவப்ப அழுதாள்; தன் கேள்வனை,
‘எங்கணாஅ!’ என்னா இனைந்து, ஏங்கி, மாழ்குவாள்;
‘இன்புறு
தம் கணவர் இடர் எரி அகம் மூழ்க,
துன்புறுவன நோற்றுத் துயர் உறு மகளிரைப் போல்,
மன்பதை அலர் தூற்ற, மன்னவன் தவறு இழைப்ப,
அன்பனை இழந்தேன் யான் அவலம் கொண்டு அழிவலோ?
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி,
துறை பல திறம் மூழ்கித் துயர் உறு மகளிரைப் போல்,
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப,
அறன் எனும் மடவோய்! யான் அவலம் கொண்டு அழிவலோ?
தம் உறு பெரும் கணவன் தழல் எரிஅகம்
மூழ்க,
கைம்மை கூர் துறை மூழ்கும் கவலைய மகளிரைப் போல்,
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப,
இம்மையும் இசை ஒரீஇ, இனைந்து, ஏங்கி, அழிவலோ?’
"ஆய்ச்சியர் முன்னிலையில் கண்ணகி கதிரவனை விளித்து, ‘என் கணவன் கள்வனோ?’
என வினவுதல"
50
காணிகா,
வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும்
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீமின்;
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டைக்க;
பாய் திரை வேலிப் படு பொருள் நீ அறிதி,
காய் கதிர்ச் செல்வனே! கள்வனோ, என் கணவன்?’-