"கதிரவனது
சொல்லைக் கேட்ட கண்ணகி, எஞ்சிய ஒற்றைச் சிலம்பை ஏந்தி நகரினுள் புக்கு, நகர
மாந்தரை நோக்கி முறையிட்டு, அழுதல"
5
10
15
என்றனன்
வெய்யோன்; இலங்கு ஈர் வளைத் தோளி
நின்றிலள்-நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி:
‘முறை இல் அரசன்-தன் ஊர் இருந்து வாழும்
நிறை உடைப் பத்தினிப் பெண்டிர்காள்! ஈது ஒன்று:
பட்டேன், படாத துயரம், படுகாலை;
உற்றேன், உறாதது; உறுவனே? ஈது ஒன்று:
கள்வனோ அல்லன் கணவன்; என் கால் சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே! ஈது ஒன்று:
மாதர்த் தகைய மடவார்கள் முன்னரே,
காதல் கணவனைக் காண்பனே, ஈது ஒன்று:
காதல் கணவனைக் கண்டால், அவன் வாயில்
தீது அறு நல் உரை கேட்பனே; ஈது ஒன்று:
தீது அறு நல் உரை கேளாதொழிவனேல்,
நோதக்க செய்தாள் என்று எள்ளல்; இது ஒன்று’-என்று
அல்லல் உற்று, ஆற்றாது, அழுவாளைக் கண்டு, ஏங்கி,
மல்லல் மதுரையார் எல்லாரும் தாம் மயங்கி-
"மதுரை
மக்கள் கண்ணகியின் அவல நிலைக்கு இரங்கிக் கூறுதல்"
20
25
30
‘களையாத துன்பம் இக்
காரிகைக்குக் காட்டி,
வளையாத செங்கோல் வளைந்தது! இது என்கொல்?
மன்னவர் மன்னன் மதிக் குடை வாள் வேந்தன்
தென்னவன் கொற்றம் சிதைந்தது! இது என்கொல்?
மண் குளிரச் செய்யும் மற வேல் நெடுந்தகை
தண் குடை வெம்மை விளைத்தது! இது என்கொல்?
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி, நம்பொருட்டால்,
வம்பப் பெரும் தெய்வம் வந்தது! இது என்கொல்?
ஐ அரி உண் கண் அழுது, ஏங்கி, அரற்றுவாள்
தெய்வம் உற்றாள் போலும் தகையள்! இது என்கொல்?’-
என்பன சொல்லி, இனைந்து, ஏங்கி, ஆற்றவும்
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை-
கம்பலை மாக்கள் கோவலன் இறந்து கிடந்த இடத்தைக் காட்ட,
மாலைப் பொழுதில் கண்ணகி தன் கணவனைக் காணுதல்
கம்பலை மாக்கள் கணவனைத் தாம் காட்ட,
செம் பொன் கொடி அனையாள் கண்டாளைத் தான் காணான்.
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி, மா மலைமேல்,
செவ்வென் கதிர் சுருங்கி, செங் கதிரோன் சென்று ஒளிப்ப,
புல்லென் மருள் மாலைப் பூங் கொடியாள் பூசலிட,
ஒல்லென் ஒலி படைத்தது ஊர்.
"கண்ணகி கோவலனைத் தழுவுதலும், அவன் உயிர்பெற்று எழுந்து பேசுதலும்"
60
என்று இவை சொல்லி அழுவாள்
கணவன்-தன்
பொன் துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக் கொள்ள,
நின்றான், எழுந்து: “நிறை மதி வாள் முகம்
கன்றியது!” என்று, அவள் கண்ணீர் கையான் மாற்ற-
"தன் பாதத்தைக் கண்ணகி பற்ற, கோவலன் வானுலகு செல்லுதல்"
65
அழுது ஏங்கி, நிலத்தின்
வீழ்ந்து, ஆய் இழையாள் தன் கணவன்
தொழுதகைய திருந்து அடியைத் துணை வளைக் கையான் பற்ற,
பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான்,
‘எழுது எழில் மலர் உண் கண்! இருந்தைக்க’ எனப் போனான்.
மாயம் கொல்? மற்று
என்கொல்? மருட்டியதோர் தெய்வம்கொல்?
போய் எங்கு நாடுகேன்? பொருள் உரையோ இது அன்று;
காய் சினம் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன்;
தீ வேந்தன்-தனைக் கண்டு, இத் திறம் கேட்பல் யான்’ என்றாள்-
"கண்ணகி சினத்துடன் பாண்டியனது கோயிலின் முன் செல்லுதல்"
75
என்றாள் எழுந்தாள்;
இடர் உற்ற தீக் கனா
நின்றாள் நினைந்தாள், நெடுங் கயல் கண் நீர் சோர;
நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையாச்
சென்றாள், அரசன் செழுங் கோயில் வாயில் முன்.