1

அறநிலைத் தலைவர் முன்னுரை

ஒரு தலைமுறைக்கு மேலாக ஒப்பற்ற இக் காப்பியத்துக்கு விளக்கமான
உரைப் பதிப்புகள்விற்பனைக்குக் கிடைப்பதில்லை. ஆகையால், கோவைக்
கம்பன் டிரஸ்ட் இத் திருப்பணியை மேற்கொண்டது.

கம்ப ராமாயண விளக்க உரை நிர்வாகக் குழுவிலும் நிதிக் குழுவிலும்
பங்கேற்று, இவ்வுரைவெளிவரக் கம்பன் அறநிலைக்கு உறுதுணை புரிந்த
நண்பர்களுக்கு நன்றி.

இந்த உரைத்திட்டம் உருப்பெறுவதற்குக் கடைகாலிட்ட செந்தமிழருட்
செம்மல் டாக்டர் பி.எஸ்.ஜி.ஜி. கோவிந்தசாமி அவர்கள் இத்திட்டத்தின்
தொடக்கத்திலேயே இறைவன் திருவடிஅடைந்துவிட்டார். அவருடைய
வாழ்க்கைத் துணைவியார் திருமதி பிரேமா கோவிந்தசாமி அவர்கள்தம்
கணவரின் ஆத்மார்த்தமான இந்தத் திருப்பணிக்கு மிகவும் ஆதரவாக
இருந்து, நிதிக் குழுஉறுப்பினர் களைப் போலவே பெருங்கொடை
வழங்கினார்கள் செந்மிழருட் செம்மலின் ஆத்ம சாந்திக்குஇதைவிடச்
சிறந்த கைங்கரியம் வேறு இல்லை. திருமதி பிரேமா கோவிந்தசாமி
அவர்களுக்கு உளமார்ந்தநன்றி

இந்தத் திட்டத்தின் வரலாறு முதலிய விவரங்கள் பாலகாண்டப்
பதிப்பிலேயே விரிவாகத்தரப்பட்டுள்ளன.

ஆயிரம் பக்கங்களுக்கு மேலாக உள்ள நூலை ஒரே தொகுதியாக
வெளியிட்டால் மிகப் பெரியதாகவும்கனமாகவும் இருப்பதால் கையாள்வதற்குக்
கடினமாக உள்ளது. எனவே, இக்காண்டம் இரண்டு பகுதிகளாகக்
கட்டுவேலை செய்யப்பட்டுள்ளது. இதனால் விலையேற்றம் தவிர்க்க
முடியாததாயிற்று. தவிர்க்கமுடியாத காரணங்களால் அச்சிடும் பிரதிகளின்
எண்ணிக்கையையும் குறைக்க நேர்ந்தது. இதனாலும்விலையேற்றம்
ஏற்பட்டது. முன் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் முன்னமே ஏற்றுக்
கொண்ட விலைக்குஅயோத்தியா காண்டமும் ஆரண்ய காண்டமும்
வழங்கப்படும்.

உரையாசிரியர்களின் ஒத்துழைப்பே இச்சீரிய பணிக்கு ஆதாரம்.
பதிப்பாசிரியர் பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் அவர்களுக்கும்
சிறப்பாக அச்சுப் பணிபுரிகின்ற காந்தளகத்தாருக்கும்நன்றி தெரிவித்துக்
கொள்கிறேன்.

1994, பிப்ரவரி ஜி.கே. சுந்தரம்
தலைவர்
கம்பன் டிரஸ்ட், கோவை