130

ஏற்றுக் கொண்டால் வனவாசம் என்னும் வரத்தின் மற்றொரு கூறு சிதையும்
என்பதை இராமன் எடுத்துக்காட்டுகிறான். இப்போது இங்கும் பரதன் மாற்றம்
கூற இயலாத சூழ்நிலைஏற்படுகிறது.

     இந்நிலையில் மேற்கொண்டு கதையை நகர்த்துவது எவ்வாறு என்னும்
சிக்கலைத் தீர்க்க இராமாயண நூல்கள் பலவகையில் முயன்றுள்ளன.
மேற்கொண்டு விவாதம் எதுவும்செய்யாமல் இராமனின் பாதம் பதிந்த
பாதுகைகளைப் பெற்றுப் பரதன் அயோத்தி மீள்வதாகவால்மீகி கூறுகிறார்.
வசிட்டன் மூலமான இராமனின் அவதார நோக்கத்தை அறிந்து பரதன்
அயோத்திக்குத் திரும்ப இசைகிறான் என்று அத்யாத்மமும் அதனைப்
பின்பற்றும் நூல்களும்கூறுகின்றன. கம்பனோ அசரீரி கூற்றைப் படைத்துப்
பரதனை இணங்கச் செய்கிறான். துளசியில்தேவர்களின் மாயையால் பரதன்
உண்மையை உணர்கிறான். மானுட நிலையில் தீர்க்கப் பெறாதசிக்கல்களை
இவ்வாறு மீமானுட உத்திகள் கொண்டு  (dues ex machine)  தீர்த்துக்
காட்டுவது உலக இலக்கியங்களில் காணப்பெறும் ஒரு பொதுவான மரபு.
இதனை இந்தியக் கவிஞர்களும்பயன்படுத்தியுள்ளனர் எனலாம்.

ராஜ்ய கல்கம் பற்றிய கருத்து வேறுபாடுகள்

     இனிக் கைகேயியின் மீது வீண்பழி சுமத்தி இராமாயணப்
பாத்திரங்களில்இராமனைத் தவிர அனைவரும் அவளை நிந்திக்கின்ற
நிலையைக் காணுற்ற அறிஞர்கள் சிலர், கைகேயிதனக்கு உரியதைத்தான்
கேட்கிறாள் ;  அதிலும் தன் கணவன் வாய்மை தவறியவன் என்னும்பழிக்கு
உட்படலாகாது என்னும் கற்பாண்மை காரணமாகத் தனக்கு வேண்டியதைக்
கேட்கிறாள் ; எனவே அவளை நிந்திப்பது அடிப்படையில்லாத திறனாய்வு
என்று கருதுகின்றனர். கைகேயி தசரதன்முன்னரே தனக்குக் கொடுத்திருந்த
வரத்தைத் தான் கேட்கிறாள். அதை இப்போது தருவதால்தசரதனுக்குத்
தர்ம சங்கடம் ஏற்படுவது உண்மையே. ஆயினும், வாய்மை சிதையுமாகலின்,
அவன்வேதனைப்பட்டாலும் அவன் புகழைக் காக்கும் எண்ணத்தால்
கைகேயி இவ்வாறு வற்புறுத்தி இரண்டுவரங்களைச் செயல்படுத்தினாள்
என்பது இவர்களின் வாதம். இவ்வாதம் சரியென்றே தோன்றுகிறது.

     இக் கருத்தை மேலும் வற்புறுத்தக் கருதிய இக்கொள்கையினர்,
இராமன்சித்திரகூடத்தில் கைகேயியின் மகனுக்குத் தன் அரசைத் தருவதாகத்
திருமணத்தின்போது தசரதன்வாக்களித்திருந்தமையைச் சுட்டிக்காட்டி, அரசு
பரதனுக்கே உரியது என்று கூறும் கருத்தைஅடிப்படையாகக் கொண்டு,
கைகேயிக்கு வாக்களித்த நாட்டைத் தசரதன் இராமனுக்குத் தரமுற்பட்டதே
தவறு.