131

எனவே, கைகேயி நிறையுடையவள் ;  தசரதனே குறையுடையவன் என்று
வாதிடுகின்றனர்.

     வான்மீகத்தில் 107ஆம் சருக்கத்தில் உள்ள மூன்றாவது சுலோகம்
இவ்விவாதத்திற்கு அடிப்படையாக அமைந்து உள்ளது.54 இம் முதனூல்
கருத்தைக் கம்பன்வெளிப்படையாகக் கூறவில்லை யேனும் சித்திரகூடத்தில்
இராமன் கூறுவதாக அமைந்த ‘வரனில் உந்தைசொல் மரபினால்’ எனத்
தொடங்கும் பாடலில் வரும், ‘நீ பிறந்து உரிமையாதலால் அரசுநின்னதே’
என்னும் தொடர் வான்மீகி கூறும் ராஜ்ய சுல்கத்தைக் குறிப்பிடுகிறது என்று
கம்பராமாயண அறிஞர் பெருமக்கள் கருதி இவ்வாதத்தை ஆதரிக்கின்றனர்.
தசரதன் மறந்துவிட்டஅல்லது தன் மகன் இராமன்மீது வைத்த பெருங்
காதலால் மறைத்துவிட்ட இவ் அடிப்படைவாக்குறுதியைக் காப்பாற்றித்
தசரதன்மீது பழி வராமல், எல்லாப் பழிகளையும் தானேஏற்றுக்கொண்ட
கற்பின் செல்வி என்று கைகேயியைப் புகழ்வது இத் திறனாய்வுப்
பார்வையின்உட்கோள். இந்த ராஜ்ய சுல்க வாக்குறுதியைக் காட்டாமலேயே
கைகேயியின் நியாயத்தைஏற்றுக்கொள்ளலாம் என்பது மேலே
காட்டப்பட்டது.

     வான்மீகியின் மேற்குறிப்பிட்ட சுலோகத்தை ஏற்றுக்கொள்வதில் சில
தடைகள் எழுகின்றன. கேகயனுக்குத் தசரதன் ராஜ்ய சுல்க வாக்குறுதியைத்
தந்திருப்பதுஉண்மையானால், இக்கூற்று வான்மீகியில், நாரத
வாக்கியமாகவோ வால்மீகி வாக்கியமாகவோ,தசரத வாக்கியமாகவோ,
கைகேயி வாக்கியமாகவோ, மந்தரையின் வாக்கியமாகவோ, வசிட்ட
வாக்கியமாகவோ வெளிப்பட்டிருக்கவேண்டும். இத்தகைய அடிப்படை
வாக்குறுதி பெற்ற கைகேயி இரண்டுவரங்களைப் பற்றிக் கவலைப்பட
வேண்டிய அவசியமே இல்லை. கைகேயியைப் பற்றிய எல்லா
உண்மைகளையும் அறிந்தவளாகவும், அவள் நலனில் அக்கரை
கொண்டவளாகவும் உள்ள மந்தரையாவது இச்செய்தியைக் கைகேயிக்கு
நினைவு படுத்தியிருக்கலாம். அல்லது இராமனுக்கு முடிசூட்டக் கருதி
அவையோர் கருத்தறிய தசரதன் முற்பட்டபோது எல்லாம் அறிந்த,
கைகேயியின் திருமணத்தைமுன்னின்று நடத்தும் பொறுப்புடைய
வசிட்டனாவது இச்செய்தியைத் தசரதனுக்கு எடுத்துக் கூறிப்பரதனுக்கே
முடிசூட்டுமாறு அறிவுரை வழங்கியிருக்கலாம். இவ்வாறு ராஜ்யசுல்கச்
செய்தியுடன்தொடர்புடைய யாருடைய கூற்றாகவும் வான்மீகி இதனைக்
கூறாமல் இராமன் கூற்றாகமட்டும் காட்டுவது


54. காண்க :  அடிக்குறிப்பு எண். 52.