132

ஏன் என்ற வினா எழுகிறது.55 இராமனுக்கு இச்செய்தியை அறிவித்தவர் யார்
என்னும் குறிப்பும் வான்மீகத்தில் இல்லை.

     இனி, இந்தச் சுலோகத்தைச் சித்திரகூடத்தில் கூறிப் பரதனைத்
தெளிவிக்க விரும்பும் இராமனே, தசரதன் தனக்கு முடிசூட்டுவதாகக்
கூறியதும் இச்செய்தியைக் கூறிப்“பரதனுக்கே அரசைக் கொடுங்கள்
அதுதான் முறை” என்று ஏன் சொல்லவில்லை? தெரிந்திருந்தும்,முடிசூட்டிக்
கொள்ள இராமன் இசைந்தது அறக்கேடில்லையா என்னும் வினா எழுகிறது.
அரசனின்கட்டளையை மறுக்க அஞ்சி, அவன் முடிவுக்கு இராமன்
இசைந்தான் என்னும் வாதம்பொருத்தமாகப்படவில்லை. ஏனெனில்,
பின்னர்க் கைகேயியின் அரண்மனையில் அவள் வரத்தால்தாக்குண்டு
வருந்தியிருக்கும்போது ‘இராம, என் ஆணையை மறுத்துவிட்டு, நீயே
முடிசூட்டிக்கொள்.இதனால் உனக்கு ஒரு பழியும் நேராது’ என்று தசரதன்
கூறியபோது அதனை ஏன் இராமன் ஏற்கவில்லை?எனவே தெரிந்திருந்த
செய்தியை மறைத்துவிட்டு முடிசூட்டிக்கொள்ள இசைந்தது இராமனைப்
பெரும்பழிக்கு உள்ளாக்குகிறது. கைகேயி வரம் கேட்காமலே இருந்திருந்தால்
என்ன ஆகியிருக்கும்?பரதனுக்குரியது என்று அறிந்திருந்தும் அவன்
நாட்டை அபகரித்துக் கொண்டான் என்ற பெரும்பழிஇராமன் மீது விழாதா?

     இப்படித் தசரதன், இராமன், வசிட்டன் என்னும் மூவர் மீதும் தீராப்
பழியை உண்டாக்கக்கூடிய இந்த கருத்து கைகேயியையும்
வஞ்சனையுடையவள் என்னும் பழியிலிருந்துவிலக்காமை கண்கூடு; தசரதன்
பழியை அவள் துடைக்கக் கருதியதாகவும் கொள்வது பொருத்தமாகப்
படவில்லை. கணவன் தன்னை இரந்தவாறும், பழித்தவாறும் தன்முன்னையே
உயிர்விடுவதைக் கண்டுகலங்காதிருக்கும் கைகேயியின் கற்புடைமையை
இந்தக் காரணத்தை முன்னிட்டுப் புகழ்வதும்பொருத்தமாகப்படவில்லை.
பாத்திரங்களைப் படைத்து உலவ விடும் இராமாயணக் கவிஞர்கள் யாரும்,
வால்மீகி, கம்பன் உட்பட, கைகேயியின் இச்செயலைக் கவிக்கூற்றாகப்
புகழ்ந்து பேசவில்லைஎன்பதும் இங்கே சிந்திக்கத்தக்கது. கூர்தலறக்
கோட்பாட்டின்படி பின்முறைச் சந்ததியினர்தம் மூதாதையரினும் அறிவுக்
கூர்மை மிக்குடையவராகத் திகழ்வர் என்பது உண்மையேயாயினும்,
முன்னைய இராமாயணக் கவிஞர்கள் அனைவருமே, இந்தச் சுலோகத்தைச்
செய்த வான்மீகியுட்பட,


55.   சீதாராம சாஸ்திரிகள், வால்மீகி முநிஹ்ருதய தத்துவசார
     பிரகாசிகா,
(திருச்சி  :  யுனெட்டெட் பிரிண்டர்ஸ் லிமிடெட், 1943)
     பக். 155-173.