இவ்வகையில் சிந்திக்காமல் கைகேயியின்மீது வீண்பழி சுமத்திவிட்டனர் என்று கருதத் தோன்றவில்லை. இவ்வாறு கருத்து வேறுபாட்டிற்கு அடிப்படையாக அமைந்து விட்ட ராஜ்யசுல்கம்பற்றிய செய்தி இலக்கிய நூல்களில் எங்கும் காணப் பெறவில்லை. சத்தியோபாக்கியானம்,அல்லது இராம ரகசியம் என்னும் சமஸ்கிருத நூலின் நான்காம் இயலில், நாரதன்வழியாகக் கைகேயியின் அழகைப் பற்றிக் கேள்வியுற்ற தசரதன் அவளை மணந்து கொண்ட செய்தி பேசப்படுகிறது ; ஐந்தாவது இயலில் மந்தரை - கைகேயி உரையாடலுக்குப் பின்னர்க் கைகேயிராஜ்யசுல்க வாக்குறுதி பற்றித் தசரதனுக்கு நினைவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது.56 இந்த இருகுறிப்புகளும் அடங்கிய மூலத்தைப் பார்க்கும் வாய்ப்பு எவ்வளவோ முயன்றும் இதுவரை கிடைக்கவில்லை. மேலும் இந்நூலின் காலம், ஆசிரியர் முதலியன பற்றிய வரலாறு அறியஇயலவில்லை. ஸ்டெயின் (Stein) என்னும் அறிஞரால் திரட்டப்பெற்றுத் தற்போது ஜம்முஅருங்காட்சியகத்தில் பாதுகாக்கப் பட்டுள்ள ஏட்டுச் சுவடியில் இந்தச் சத்தியோபாக்கியானம்பிரம்மாண்ட புராணத்தின் ஒரு பகுதி என்றும் (ப. 207) பத்மபுராணத்தின் ஒரு பகுதி என்றும் (ப.204) இருவேறாகக் குறிக்கப்பட்டுள்ளது. எனவே, இது ஒரு முழு நூலா அன்றி வேறொரு நூலின் பகுதியாஎனவும் அறிய இயலவில்லை.57 எனவே சுவடியிலுள்ள இந்நூல் முழுவதுமாகப் பதிப்பிக்கப் பட்டாலன்றி அல்லதுஅறிஞர்களின் பயன்பாட்டிற்கு வந்தாலன்றி இராமன் கூற்றாக வரும் ‘ராஜ்யசுல்கம்’ பற்றிதிட்டவட்டமாக எதுவும் கூற இயலாத நிலையில் உள்ளோம். பிரதிமா நாடகம் என்னும் பிற்காலநாடகநூலை மட்டும்கொண்டு இச்சிக்கலுக்குத் தீர்வுகாண இயலவில்லை. வான்மீகத்தின் இருவகை வழக்குகளிலும் (தென்புல, வடபுல) காணப்படும் இச்சுலோகம் வால்மீகியின் கூற்றுத்தானா எனவும்ஐயப்படக்கூடிய நிலையில் இவ் ஆய்வு நிறைவுறுகிறது. இராமன் அயோத்திக்குத் திரும்பி அரசேற்றல் என்னும் பொருளை மையமிட்டுநிகழும் இராமன் - பரதன் சந்திப்பைப் படைத்துக் காட்டுவதில் இராமாயண நூல்கள் பெரும்பாலும்ஒத்துச் செல்கின்றன. எல்லா இராமாயண நூல்களுக்கும் முத
56. Purana Bulletin (Ayodhya Special issue) P. 153. 57. சென்னைப் பல்கலைக் கழகச் சமக்கிருதத் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் கங்காதரன் அவர்களின் கருத்து. |