னூல் வான்மீகமேயாயினும், கருத்தளவிலும் பாத்திரப் படைப்பளவிலும் முதனூலுடன் மிகுதியும் ஒத்துச் செவ்து கம்ப ராமாயணம்தான் என்று கொள்வதற்குச் சான்றுகள் பலஉள. வடநாட்டு மொழிகள் பலவற்றிலும் தோன்றியிருக்கம் இராமாயண நூல்கள் தாந்திரிகக்கோட்பாட்டாலும், அத்வைதம் முதலிய தத்துவக் கோட்பாட்டாலும் தாக்கமுற்று, புஷு ண்டி, அத்யாத்மம், துளசி ராமாயணங்களாகப் பரிணாமப்பட்டுள்ளன ; பிறவெல்லாம் இம்மூன்றனுள்ஒன்றாலோ, பலவாலோ தாக்கமுற்றள்ளமையின் வான்மீகத்திலிருந்து சற்று அதிகமாக விலகிச்சென்றிருக்கக் காண்கிறோம். கருத்தில் மிகுதியாக வேறுபடாவிடினும், கற்பனைத் திறத்திலும் கவித்துவப்பண்பிலும் முதனூலையும் விஞ்சி நிற்கும் கம்பராமாயணம், தாந்திரிகத்தையோ, தத்துவத்தையோசாராமல், ஆத்திக நோக்குடையதாயினும் நாத்திகரும் நாத்தழும்பேறப் படித்துச் சுவைக்கும் பயன்மரமாகத் தமிழில் பழுத்துள்ளது. பக்தி இயக்கத்தின் அந்திம காலக் காப்பியமாகிய துளசிராமாயணம் இராம பக்தி எனும் அளப்பரும் அமுதத்தைக் கற்றார்க்கும் கல்லார்க்கும் வாரிவழங்கும் நோக்கமுடையதாகலின் முதனூலிலிருந்து கருத்தாலும் பாத்திரப்படைப்பாலும் பெரிதும்வேறுபட்டிருக்கக் காண்கிறோம். இராம காதையின் வாயிலாகப் பண்பாட்டு வரலாற்றுப் பெட்டகமாக வால்மீகியும், கற்றோர் களிக்கும் கவிதைச் சுரங்கமாகக் கம்பனும், பக்திப் பரவசக்கடலாகத் துளசியும் இந்திய மக்களிடையே முப்பெரும் காப்பிய மும்மூர்த்திகளாக விளங்குகின்றனர்என்று கூறி இக் கட்டுரையை நிறைவு செய்யலாம். நன்றியுரை இச்சிறிய கட்டுரையை எழுதுவதற்குப் பல்லாற்றானும் உதவி புரிந்த கீழ்க்குறிப்பிடப்பெறும் அருளுக்கும் அறிஞர் பெருமக்கட்கும் நெஞ்சார்ந்த நன்றியுடையேன். ஸ்ரீராமன் திரு.ஜி.கே. சுந்தரம் திரு. E. வெங்கடேசலு திரு. R. வெங்கடேசலு பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தன் பேராசிரியர் ம.ரா.போ. குருசாமி பேராசிரியர் பிரபாகர வாரியர் (மலையாளம்) பேராசிரியர் E.K. புருஷோத்தமன் (மலையாளம்) |