17

நாளும் பரதனை அவனுடைய பாட்டன் வீட்டிற்கு அனுப்பி வைக்காத
தசரதன், - அவன் திருமணம் செய்துகொண்டுஅப்போது  தான்
திரும்பியிருக்கிறான்,  ‘மனைவியை விட்டுவிட்டுப்  பாட்டன் வீட்டிற்குப்
போய்வா’ என அவனை அனுப்பி வைக்க வேண்டிய சூழ்நிலை என்ன
ஏற்பட்டது  என்ற சிந்தனை ஓடத்தான்செய்கிறது. நம்முடைய மனத்தில்
தோன்றுகின்ற  இந்த ஐயத்தினைக் கூனி வெளிப்படுத்துகின்றாள்.

     "பாக்கியம் புரிந்திலாப் பரதன்தன்னை பண்டு
     ஆக்கிய பொலங் கழல் அரசன்,  ஆணையால்
     தேக்கு உயர் கல் அதர் கடிது சேணிடைப்
     போக்கிய பொருள் எனக்கு இன்று போந்ததால்"
         (1465)

‘ஏன் பரதனைப் பாட்டன் வீட்டிற்கு அனுப்பினான் தசரதன் என்பது எனக்கு
இப்போது  புரிந்துவிட்டது. இராமனுடைய பட்டாபிஷேகம் பற்றிப் பேசுகின்ற
நேரத்தில் பரதன் இங்கிருந்தால் அது  பிரச்சனைக்குஇடமாகும் என்று
கருதித்தான் கேகய நாட்டிற்கு அனுப்பினான் என்று சூழ்ச்சிக்காரியாகிய கூனி
பேசுகிறாள்.  அவள் பேசுவதிலும் ஓரளவு நியாயம் இருக்கிறது.  ஆகவே 
மந்திரப் படலத்தில்,  தன்எண்ணத்திற்குத்  தடையாக இருக்கக்கூடியவன்
யார் என்று சிந்தித்து,  பரதனை அப்புறப்படுத்திவிட்டு தசரதன் 
மந்திராலோசனை நடத்துகின்றான்.  மந்திராலோசனையின் முடிவில்
தசரதனுடைய மனக்கருத்தைஅனைவரும் ஏற்றுக் கொள்கிறார்கள். எனவே,
மந்திரப்படலத்தைப்  பொறுத்தமட்டில் கதைசுமுகமாகத்தான் போகின்றது.

     இனி ‘மந்தரை சூழ்ச்சிப் படலம்’ என்பது அடுத்து நிற்பதாகும். இந்த
மந்தரை என்ற பாத்திரம்ஒரு விநோதமான பாத்திரமாகும். அவளுடைய
நிலை என்னவென்றால்,  கைகேயியுடன்கூட அவளது பிறந்தகத்தில்இருந்து
வந்த பணிப் பெண்தான் அவள்.  பணிப்பெண்ணாக  இருக்கின்ற ஒருத்தி
ஒரு மாபெரும்  சூழ்ச்சியைச் செய்து,  இராம காதையையே திசை மாற்றம்
செய்கின்ற அளவுக்கு,  ஒரு பெரிய காரியத்தைச்சாதிக்கின்றான் என்றால்
அது  நம்முடைய மனத்தில் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லை.

     அதுமட்டுமல்ல

     "அரசரில் பிறந்து,  பின் அரசரில் வளர்ந்து
     அரசரில் புகுந்து,  பேர் அரசி"                       (1467)

யாக இருக்கின்ற கைகேயியின் மனத்தைக் கேவலம்  ஒரு பணிப் பெண் 
மாற்றிவிட்டாள்  என்றுசொல்வதை,  கம்பனும்கூட  ஏற்றுக்கொள்வதாகத் 
தெரியவில்லை.  ‘மந்தரை துணைக் காரண