மாக இருந்தாள். இந்த மாபெரும் காரியம் நடைபெறுவதற்கு அடிப்படையாக இருந்தாள்’ என்பது தவிர, கைகேயியின் மனமாற்றம் கேவலம் கூனியினால் ஏற்பட்டதல்ல என்பதை அறுதியிட்டுக் கூறுபவன்போல, கம்பன் பேசுவான். "அரக்கர் பாவமும், அல்லவர் இயற்றிய அறமும் துரக்க, நல் அருள் துறந்தனள் தூ மொழி மடமான்." (1484) என்பதாக ஆக கைகேயியின் மனம் திரிந்தது என்றால் அது கேவலம் கூனியினுடைய சூழ்ச்சியால் அன்று. அரக்கருடைய பாவமும், அல்லவர்களுடைய தவமும் சேர்ந்து கைகேயியின் மனத்தை மாற்றின என்று சொல்லுகின்ற முறையில் கைகேயினுடைய பாத்திரப் படைப்பை மிக உயர்த்தி விடுகின்றான் கம்பநாடன். கூனியைப் பொறுத்தமட்டில் ஒன்றைச் சிந்தித்துப் பார்க்க முடிகின்றது. ஒரு சிலர் எக்காரணமும்இல்லாமல் பிறருக்குக் கெடுதல் செய்ய முற்படுகின்றதைக் காணுகின்றோம். தங்களுக்குத் தீங்கு இழைக்கப்பட்டால் அதற்குப் பழி வாங்க வேண்டுமென்ற எண்ணத்தில் தீங்கு செய்வது ஒரு முறை. அதன் மறுதலையாக எவ்விதக் காரணமும் இல்லாமல் பிறருக்குத் தீங்கு செய்தல் என்பது ஒரு சிலரின்படைப்பு ரகசியமாகும். ஷேக்ஸ்பியருடைய மிகப் பிரசித்திபெற்ற ‘ஒதெல்லோ’ நாடகத்தில் வருகின்ற ‘அயாகோவை’ ப் போல, உள்ளமும் கோடிய கொடியாள் (1487) ஆகிய கூனி ‘தன் மனத்தே நினைந்து செய்யும் கொடுமை உடையவள்’ என்று கொள்வதில் தவறுஇல்லை. இவள் இந்தக் காண்டத்திலேயுள்ள 2வது படலமாகிய ‘மந்தரை சூழ்ச்சிப் படலத்தில்’காணப்படுகிறாள். இந்தப்பாத்திரப் படைப்பு உலகத்திலுள்ள மக்களுள் இப்படியும் ஒரு சிலர் உண்டுஎன்பதற்கு ஓர் ஒப்பற்ற எடுத்துக்காட்டாக அமைவது தவிர, வேறு ஒன்றும் இல்லை. இவள் கைகேயினிடம் சென்று, மிக மென்மையாகப் பேசி, அவள் மனத்தைக் கலைத்து, அவள் இராமன்மாட்டுக் கொண்டிருந்தஆழ்ந்த அன்பைத் திரித்து, வரங்களின் மூலமாக, இராமன் காட்டாட்சியும், பரதன் நாட்டாட்சியும்பெறுமாறு செய்துவிடுகிறாள் என்பதோடு இந்தப் படலம் முடிந்துவிடுகின்றது. இந்தப் பாத்திரம், இந்தக் காரியத்தைச் செய்தது தவிர, இராம காதை முழுவதிலும் ஒரேஒரு இடத்தில் தான் தலை |