19

காட்டுகிறது. ‘இராமனை அழைத்துவர பரதன் காட்டுக்குப்போகும்போது
அனைவரும் அவனுடன் செல்கிறார்கள்.கூனியும் செல்கிறாள். சத்துருக்கனன்
அவளைத் தண்டிக்கப் புறப்படுகின்றான்.  ஆனால்,  பரதன்தடுத்து
நிறுத்திவிடுகிறான’ என்ற அளவிலே கூனிப் பாத்திரம் தோன்றி மறைந்து
விடுகின்றது.

     இனி கதாநாயகனுடைய தந்தையாகிய தசரதன் இறுதியாக இந்தக்
காண்டத்தில் காட்சியளிக்கின்றான்.‘அவன் செய்த செயல்கள் அவனுடைய
வாழ்வுக்கு ஒருமுடிவைத் தந்துவிட்டன’  என்று கம்பன்பேசுகின்றான்.

     "மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்"          (1514)

ஆக வளர்ந்துவிட்ட காரணத்தால், அவன் உயிர் போன்று
இருக்கின்றவனாகிய  இராமன் காட்டுக்குப்போகிறான் என்று
அறிந்தவுடனேயே மயக்கமடைகின்றான்.  எப்படியாவது  திரும்பி வந்து
விடுவான் என்ற நினைவிலே உயிரைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு
இருக்கின்றான்.  தேரோட்டிச் சென்றசுமந்திரன்  ‘இராமன்,  சீதை
இலக்குவன்’ ஆகிய மூவரையும் விட்டுவிட்டு நகருக்குத் திரும்பி
வந்துவிடுகின்றான். ரதம் திரும்பி வந்தது  என்று  கேள்விப்பட்டவுடன்
தசரதன் மூர்ச்சை தெளிகின்றான். ‘ஒருவேளை இராமன் வந்து விட்டானோ’
என்று சுமந்திரனாகிய தேரோட்டியை அழைத்து,

     ‘வீரன் வந்தனனோ’                                  (1896)

என்று கேட்கின்றான்.

தேர்வலானும்,

     "வேய் உயர் கானம் தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
      போயினன் என்றான்."
                             (1898)

அவ்வளவுதான்.

     "போயினன் என்றான் என்ற போழ்தத்தே ஆவி போனான்"(1898)

என்று கம்பன் முடிப்பான்.  இராமன் கானம் போய்விட்டான் என்று
சொன்னவுடனேயே தசரதனுடைய ஆவி பிரிந்துவிட்டது  என்று பேசுகிறான்.

     தன்னால் பேரன்பு செய்யப்பட்ட இராமன் எத்தகையவன்,  எத்தகைய 
பண்பு  நலமுடையவன், என்ன குறிக்கோளுடையவன் என்பதை எல்லாம்
தசரதன் நன்கு அறிந்திருந்தானா என்பது